பெட்ரோல், டீசல் விலை குறைப்பு! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Posted : சனிக்கிழமை, மே 21 , 2022 19:07:43 IST
பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை 7 ரூபாயும் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருவதால், அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைக்கப்படுவதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை 7 ரூபாயும் குறையும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளவர. பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.