அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ரெட் நோட்டீஸ்: திரை விமர்சனம்

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   13 , 2021  16:03:17 IST


Andhimazhai Image

கிளியோபாத்ராவுக்கு மார்க் ஆண்டனி மூன்று அபூர்வமான அலங்கார முட்டைகளைப் பரிசாக வழங்கினார். அவற்றில் இரண்டு கண்டெடுக்கப்பட்டு மியூசியத்தில் உள்ளன. மூன்றாவதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆரம்பத்திலேயே கரடி விட்டுத்தான் ரெட் நோட்டீஸ் ஆரம்பிக்கிறது.

 

ட்வயின் ஜான்சன், ரெயன் ரெனாட்ஸ், கால் கோடாட் என மூன்று பெரிய நடிகர்கள் சேர்ந்து இருப்பதால் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது ரெட் நோட்டீஸ்.

 

ஜான்சன் தான் படத்தைத் தயாரித்தும் இருக்கிறார். ராக் ஜான்சனைப் பிடிக்காதவர்கள் இங்கேகுறைவு. ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’  ‘ஜுமாஞ்சி-2’ ‘ பே வாட்ச்’ வகை ஏராளமான ஆக்‌ஷன் படங்களில் பட்டையைக் கிளப்பி இருக்கும் இவர் இதிலும் அடித்து ஆடுகிறார்.  ’டெட்பூல்’ ரெயன் ரெனால்ட்ஸ் எல்லோருக்கும் தெரிந்தவர். அதைவிட ’வொண்டர்வுமன்’  கால் கோடாட் பலரைப் பைத்தியமாக அடித்தவர்.

 

இவர்கள் ஒருவர் வந்தாலே தாங்காது. மூன்று பேர் என்பதால் திகட்டத் திகட்ட ஆக்‌ஷன்.

 

கிளியோபாட்ராவின் முட்டைகளைத் திருட ரெயன் ரெனால்ட்ஸ் போக, அதைத் தடுக்க இண்டர்போல் உதவியுடன் எப் பி ஐ ஏஜெண்ட் ஜான்சன் போராட, இடையில் புகுந்து முட்டைகளை அடித்துக்கொண்டு பறக்கிறார் உலகின் மிகச் சிறந்த கலைப்பொருள்கள் திருடி கால் கோடாட். இதுதான் கதை.

 

திருப்பங்கள், ஏமாற்றுவேலைகள் என மல்ட்டி ஹீரோ படங்களில் வரும் எல்லா அம்சங்களும் இதில் உண்டு. கொஞ்சம் இண்டியானா ஜோன்ஸ், கொஞ்சம் ஜேம்ஸ்பாண்ட், கொஞ்சம் ஜாக்கிசான் படங்களை ஒரு குடுவையில் எடுத்து குலுக்கி ரெட் நோட்டீசாக தயாரித்து விட்டிருக்கிறார்கள். ரோம், எகிப்து, ரஷ்யா, அர்ஜெண்டினா, பாலி என பறந்து பறந்து ஆக்‌ஷன்களை அடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் எல்லா இடங்களையும் இண்டோரிலேயே செட் போட்டு கிராபிக்ஸ் மிக்ஸ் பண்ணி எடுத்துட்டாய்ங்க என்ற விமர்சனங்கள்தான் எங்கும் கிடைக்கின்றன.

 

அபூர்வ கலைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட எல்லா வரலாற்று கப்சாக்களும் இதில் உண்டு.

 

இண்டர்போல் போலீஸாக வரும் ரித்து ஆர்யா, பாவம்.

 

ஜாலியாக ஓர் ஆக்‌ஷன் திரில்லர் பார்க்க விரும்புகிறவர்கள் ரெட் நோட்டீஸ் பார்க்கலாம். ஆனால் பல காட்சிகளை எங்கியோ பார்த்துட்டோமே என்று சொல்லக்கூடாது. கண்ணை மூடிக்கொண்டு கால் கோடாட்டை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவேண்டும்.

 

கிளியோபாத்ராவின் முட்டைகள் என்று சொல்லப்படும் கலைப்பொருள் விவரங்கள் சுத்த கப்சாவாம். படத்துக்காக அடித்துவிட்டிருக்கிறார்கள். படம் பார்த்தபின்னால் இவற்றைத் தேடி யாரும் அலையக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் குறிப்பிடுகிறோம்.

-எம்.எம். 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...