???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒடிஷாவிற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   10 , 2018  23:02:00 IST

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தித்லி புயல், இன்று ஒடிஷாவில் கரையைக் கடக்கவிருப்பதால் அம்மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 
மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் தித்லி புயல் வலுவடைந்து, அதி தீவிர புயலாக மாறி ஒடிஷாவில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று காலை ஒடிஷாவின் கோபால்பூர் - வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதேபோல் அரபிக்கடலில் உள்ள தீவிர புயல் லூபன் தற்போது ஏமனில் இருந்து 610 கிலோ மீட்டரில் நிலைகொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
 
 
இதையடுத்து மத்திய மேற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 11-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மேற்கு அரபிக்கடலுக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஒடிசாவில் புயல் கரையை கடக்க உள்ளதால் அம்மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கபட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்த வேகம் 125 கி.மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ள இந்திய வானிலை மையம், ஆந்திரா மற்றும் ஒடிஷாவின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை, மிதமிஞ்சிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
 
இதனிடையே ஒடிஷாவில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜபதி, கன்ஜம், பூரி, ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...