???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரவிந்த் கெஜ்ரிவாலும் ஹனுமான் சாலிசாவும்!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   11 , 2020  10:22:08 IST


Andhimazhai Image
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் மூன்றாவது முறையாக வென்றதற்கு பின் வருபவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
 
பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக விமர்சிக்காதது:
 
முன்பெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியை கோழை, மனநோயாளி என விமர்சித்ததிலிருந்து, இப்போதைய தேர்தலில் அவரை முற்றிலுமாக புறக்கணித்தது ஒரு முக்கியக் காரணம். இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சாதகமான சூழலையே ஏற்படுத்தியிருக்கிறார். டெல்லி தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சுமார் 56 பேரணிகளில் எதிலுமே மோடியை அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கி பேசவில்லை. இது கெஜ்ரிவால் மீது மக்களுக்கு ஈர்ப்பை உண்டாக்கியது.
 
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இணையான வேட்பாளரை எதிரணி அறிவிக்காதது:
 
கடந்த ஆட்சியில் தனது திறம்மிக்க ஆட்சியாலும், சிறந்த அணுகுமுறையாலும் மக்கள் செல்வாக்கை பெற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு இணையான ஒரு முதல்வர் வேட்பாளரை பாஜக உள்ளிட்ட எதிரணி நிறுத்த தவறியது ஒரு முக்கிய காரணம். 
 
மனோஜ் திவாரியை பாஜக முன்னிறுத்த முயன்றாலும், அவரது முட்டாள்தனமான செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பதிலடி கொடுத்தது ஆம் ஆத்மி.
 
மின்சாரமும், தண்ணீரும்:
 
கடந்த 2012-இல் அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீக்‌ஷித் மின்சாரக் கட்டணம், தண்ணீர் விநியோகக் கட்டணத்தை கணிசமாக உயர்த்தினார். இது டெல்லி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதை அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ந்தார். மாதம் 20,000 லிட்டர் நீரை இலவசமாக வழங்கியது ஆம் ஆத்மி. 200 யூனிட் வரை இலவச மின்சாரம், 201 – 400 யூனிட்டுக்கு 50% தள்ளுபடி என கெஜ்ரிவால் அசத்தினார். இவை இரண்டும் அவரது வெற்றியை பிரகாசப்படுத்தின.
 
மொஹல்லா க்ளீனிக்ஸ்:
 
மாநகரம் முழுவதும் 400 மொஹல்லா க்ளீனிக்கை உருவாக்கி இலவச மருத்துவ ஆலோசனை, சலுகை விலையில் மருந்துகளை வழங்கினார். ஆம் ஆத்மி பட்ஜெட்டில் மருத்துவத்துக்கு கூடுதல் நிதி சேர்த்து  15,600 கோடி ஒதுக்கப்பட்டது.
 
பள்ளிகள், கல்வி, சிசிடிவி கேமரா:
 
பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு சிறப்பான கல்வி வழங்கப்படுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்தது. தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 93-ஆக இருக்க, அரசு பள்ளிகளோ 96.2% தேர்ச்சி முடிவுகளை அளித்தன. கல்விக்கு பட்ஜெட்டில் 15, 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 
 
டெல்லி முழுவதும் 1.5 மில்லியன் சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்கிற பாஜகவின் குற்றச்சாட்டு அவர்களுக்கே ஆப்பு வைத்தது. தாங்கள் பொறுத்திய சிசிடிவி கேமராவில் படமான அமித் ஷாவின் தேர்தல் பிரசாரத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தார் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா.
 
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு:
 
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவந்தபோது அதிலிருந்த சர்ச்சைகளை அரவிந்த் கேஜ்ரிவால் தெளிவுபடுத்தினார். இந்தியாவில் இருக்கும் மக்களுக்கே வேலைவாய்ப்பும், இருக்க வீடுகளும் இல்லை. இதில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு எப்படி மோடி அரசு அடிப்படை வசதிகளை வழங்குமென அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வியெழுப்பினார். இந்த திட்டங்களை பெருமளவு எதிர்த்து சிக்கலில் மாட்டாமல் விலகிச் சென்றிருந்தார் அவர்.
 
ஹனுமான் சாலிசா:
 
தான் ஒன்றும் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை, எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்கிற பிம்பத்தை தன்மீது சரியான நேரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்படுத்தினார். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஹனுமான் சாலிசாவை ஓதினார். அதேபோல் வாக்குப்பதிவுக்கு முன்னர் ஹனுமான் கோயிலுக்கு சென்று செண்டிமெண்ட்டாகவும் மக்களை கவர்ந்தார்.ஜெயித்த பிறகும் ஹனுமான் கோவிலுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாவற்றையும் விட டெல்லி மக்கள் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பியிருக்கிறார்கள் என்பதும் உண்மையே.
 
- வசந்தன்
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...