அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் – உத்தவ் தாக்கரே

Posted : புதன்கிழமை,   ஜுன்   22 , 2022  19:04:10 IST

முதலமைச்சர் பதவி வரும், போகும் ஆனால் மக்களின் பாசமே உண்மையான சொத்து என்று  உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 
மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதலமைச்சராக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

 
 288 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மராட்டியத்தில் 2019-ல் நடந்த தேர்தலில் சிவசேனா 55, தேசியவாத காங்கிரஸ் 53 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களை கைப்பற்றின. பெரும்பான்மைக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் சுயேட்சைக்குள் உதவியுடன் 167 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

 
இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மராட்டிய அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். 40 எம்.எல்.ஏ.க்களில் 33 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, தன்னிடம் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், 6 சுயேட்சைகள் என 46 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார்.

 
இதனை தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

 
இந்த நிலையில், மராட்டிய முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயார் என்று உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், எம்.எல்.ஏ.க்கள் சொன்னால் எனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளேன். இது எண்ணிக்கையைப் பற்றியது அல்ல, எனக்கு எதிராக எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள், அப்படி எனக்கு எதிராக ஒரு எம்.எல்.ஏ. இருந்தால் கூட எனது பதவியை விட்டுவிடுகிறேன். ஒரு எம்எல்ஏ கூட எனக்கு எதிராக இருந்தால் அது எனக்கு மிகவும் அவமானகரமானது. முதலமைச்சர் பதவி வரும், போகும் ஆனால் மக்களின் பாசமே உண்மையான சொத்து. கடந்த 2 ஆண்டுகளில், மக்களிடம் அதிக பாசத்தைப் பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது அதுவே நிரந்தரமானது என்றார்.


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...