???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போக்குவரத்து விதிமீறல்: இரண்டு நாட்களில் ஒன்றரை லட்சம் வழக்குகள் பதிவு 0 இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! 0 டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை! 0 கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம்தான் முதன்மையான மொழி: எடியூரப்பா 0 பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து: தலைவர்கள் வாழ்த்து! 0 பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை 0 பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது! 0 அதிமுக அரசின் லஞ்சம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: ஸ்டாலின் காட்டம் 0 ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதலமைச்சர் 0 அரசு அளித்த சத்தியத்தை ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்ற முயற்சிக்கக் கூடாது: கமல் 0 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் 0 உ.பி.யில் மாணவி பாலியல் புகார்: பாஜக தலைவர் சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு 0 இந்தி திணிப்பை எதிர்த்து மற்ற மாநிலங்களுடன் இணைந்து போராடுவோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 0 சட்டப்பிரிவு 370 -ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை! 0 ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கிய 1.76 லட்சம் கோடி! என்ன? ஏது? எப்படி? தெரிந்துகொள்ளுங்கள்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   30 , 2019  03:59:58 IST


Andhimazhai Image
இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. இந்த நடவடிக்கை மீது பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதோடு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடமிருந்து நிதியை பெறலாமா? இதனால் அரசுக்கு கிடைக்ககூடிய நன்மை என்ன? தனது நிதியை அரசுக்கு வழங்கிவிட்ட ரிசர்வ் வங்கிக்கு பிற்காலத்தில் சிக்கல் ஏற்படுமா? போன்ற கேள்விகள் பலரையும் குழப்பமடைய செய்திருக்கிறது.
 
இந்த பணப்பரிமாற்றம் குறித்து புரிந்துகொள்வதற்குமுன் ரிசர்வ் வங்கியின்  நிதி கையிருப்பு பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியில் மூன்றுவிதமான நிதி கையிருப்புகள் உள்ளன. 1) நாணய மற்றும் தங்க மறுமதிப்பீட்டு கணக்கு (சி.ஜி.ஆர்.ஏ), 
2) எதிர்பாரா செலவுக்கான நிதி (சி.எஃப்) 
3) சொத்து மேம்பாட்டு நிதி (ஏ.டி.எஃப்) .
 
இதில் சி.ஜி.ஆர்.ஏ நிதிதான் மிக அதிகமானது. தங்கம், அன்னியசெலாவணி  ஆகியவற்றால் கிடைக்கும் இந்நிதியின் கையிருப்பு 2017-18 நிதியாண்டில்  6.91 லட்சம் கோடியாக உள்ளது. 2010-ல் இருந்து இதன் ஆண்டு வளர்ச்சி விகிதம் 25%-ஆக இருக்கிறது.
 
 எதிர்பாரா செலவுக்கான நிதி (சி.எஃப்)   என்று சொல்லப்படுவது இரண்டாவது பெரிய நிதி கையிருப்பு. இப்போது 2.32 லட்சம்கோடி ரூ உள்ளது. இது எதற்குப் பயன்படுகிறது என்றால் எதிர்பாராமல் ஏற்படும் நாணய விகித மாற்றங்களால் உருவாகும் சிக்கல்களைச் சமாளிக்க. இந்த நிதி ரிசர்வ் வங்கி சம்பாதிக்கும் லாபத்தால் உருவாக்கப்படுகிறது. சொத்து மேம்பாட்டு நிதி (ஏ.டி.எஃப்)  என்று சொல்லப்படும் மூன்றாவது நிதியானது குறைந்த அளவிலானது.
 
ரிசர்வ் வங்கியிடம் இவ்வளவு உபரி நிதி கையிருப்பு உள்ளதே.. ஏன் அரசுக்குக் கொடுக்கவேண்டியதுதானே என்று அரசு கேட்டுப்பார்த்தது. முந்தைய கவர்னர் உர்ஜித் படேல் மாட்டேன் என்று சொன்னதோடு பதவியை விட்டும் போய்விட்டார். புதிதாக ஐஏஎஸ் அதிகாரி சக்தி  காந்த தாஸை அரசு நியமித்தது. அத்துடன் இந்த நிதியை அரசுக்குக் கொடுப்பது பற்றி ஆராய முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பரிந்துரையின் பேரில்தான் ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபா மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. 
 
இந்த கமிட்டி ரிசர்வ் வங்கியில் எதிர்பாரத செலவுக்கான  நிதி அதன் வரவுசெலவுக் கணக்கில் 5.5 - 6.5 சதவீதம் இருந்தால் போதும் என வரம்பு நிர்ணயித்தது. இப்போது அது 6.8% ஆக இருக்கிறது. எனவே இதில் உள்ள மீதி அரசுக்கு அளிக்கலாம்.  அதாவது 5.5% சதவீதம் வைத்துக்கொண்டு மீதியை. இது மட்டுமே 52,637 கோடி ரூபாய் வருகிறது!
 
நாணய மற்றும் தங்க மறுமதிப்பீட்டு கணக்கு (சி.ஜி.ஆர்.ஏ) நிதி உள்ளது அல்லவா?அது வரவு செலவுக் கணக்கில் 20-24.5% இருந்தால் போதும் என்று ஜலான் கமிட்டி தீர்மானித்தது. இப்போது அது 23.3% உள்ளது. எனவே அதில் இனி கூடுதலாக சேர்க்கவேண்டாம். ஆகவே ரிசர்வ் வங்கியின் இந்த ஆண்டு லாபமான 1,23,414 லட்சம் கோடியை மத்திய அரசுக்குக் கொடுத்துவிடலாம் என்று ஜலான் கமிட்டி சொன்னது
இது இரண்டும் சேர்த்துத்தான் 1.76 லட்சம் கோடி. 
 
மத்திய அரசுக்கு இருக்கும் நிதி தேவையை ஒப்பிட்டால் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்படும் இந்த தொகை பெரியளவில் பயனளிக்காது, ஏனெனில்  மத்திய பட்ஜெட் தாக்கலின்போதே ரிசர்வ் வங்கியிடமிருந்து 90,000 கோடி பெற்றுள்ளதாக மத்திய அரசு கணக்கு காட்டிவிட்டது. இதனால் 1.76 லட்சம் கோடியில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி இப்போது வழங்கும் தொகை 86,000 கோடி மட்டும்தான். இப்போதைக்கு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி ஏதும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், ரிசர்வ் வங்கி யோசித்துத்தான் செயல்படவேண்டி இருக்கும்.
 
 
 

English Summary
RBI's Rs 1.76 lakh crore lifeline to government issue

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...