???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரத்தன் டாட்டா ஓய்வு

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   28 , 2012  06:00:38 IST

புகழ் பெற்ற டாட்டா குழும நிறுவனங்களின் தலைவராக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய திரு.ரத்தன் டாட்டா இன்று 28.12.2012 முதல் பணியிலிருந்து ஒய்வு பெறுகிறார். இவரது தலைமையில் டாட்டா குழும நிறுவனங்கள் அடைந்த வளர்ச்சி அனைவரும் அறிந்ததே. ஜே.ஆர்.டி.டாட்டா வின் தத்துப் பிள்ளைக்கு மகனாகப் பிறந்த திரு.ரத்தன் டாட்டா 1962ஆம் ஆண்டு டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார்.

1991ஆம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாட்டா, தலைமைப் பொறுப்புக்கு திரு.ரத்தன் டாட்டாவை நியமித்தபோது "அனுபவமில்லாதவர்" என்றும் "தலைமைப் பொறுப்புக்கு லாயக்கற்றவர்" என்றும் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளானார். பணியில் அமர்ந்தபின் இவரது செயல்பாடுகள் விமர்சித்தவர்களை வாயடைக்க வைத்ததோடு டாட்டா குழும வணிகத்தை உலக அளவில் புகழ் பெற செய்தது.

இவரது தலைமையில் டாட்டா குழுமம் பல வெளி நாட்டு நிறுவனங்களை வாங்கியது. டாட்டா டீ நிறுவனம் Tatley நிறுவனத்தை வாங்கியது. டாட்டா மோட்டார்ஸ் Jaguar Landrover நிறுவனத்தையும், டாட்டா ஸ்டீல் உலகப் புகழ் பெற்ற இரும்பு தயாரிப்பு நிறுவனமான Corus நிறுவனத்தையும் விலைக்கு வாங்கின. டாட்டா குழுமத்தின் எல்லைகளை  உலக அளவில் விரிவுபடுத்தினார்.

ஒரு லட்சம் ரூபாயில் ஒரு கார் என்று இவர் அறிமுகப் படுத்திய டாட்டா நானோ கார் பல நடுத்தர மக்களின் கார் கனவை நிறைவேற்றி வைத்தது. இன்று ஒய்வு பெரும் திரு.ரத்தன் டாட்டாவுக்கு வயது 75. இவரைத் தொடர்ந்து டாட்டா குழுமத் தலைவராக 45 வயதாகும் திரு.சைரஸ் மிஸ்திரி பொறுப்பு ஏற்கிறார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...