???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டாடாவின் காதல் தோல்வி!

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   17 , 2020  04:27:13 IST


Andhimazhai Image

தொழிலதிபரான ரத்தன் டாடா தன் இளமைக்கால நினைவுகளை ஒரு பேச்சின் போது நினைவு கூர்ந்து இருக்கிறார். சில விஷயங்கள் அதில் சுவாரசியமாக இருக்கின்றன.

இவரது பெற்றோரான நாவல், சூனி டாடா இருவரும் ரத்தன் சிறுவனாக இருக்கும்போதே விவாகரத்து செய்துகொண்டனர். பின்னர் அவரது அம்மா மறுமணம் செய்துகொண்டார்.  அது அந்த காலத்தில் புதிதாக இருந்ததால் சக சிறுவர்களால் கிண்டலுக்குள்ளாகி இருக்கிறார் டாடா.

பெற்றோர் விவாகரத்துக்குப் பின் தனது பாட்டியின் ஆதரவிலே இவர் தன் சகோதரருடன் இருந்தார்.

’’ யார் என்ன கிண்டல் செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும். நம் மரியாதையை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்று பாட்டி இவருக்குப் போதித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னர் பாட்டி இவர்களை லண்டனுக்கு கோடை விடுமுறைக்கு அழைத்துப்போனார். அவர் அங்கே வைத்துக் கூறிய அறிவுரைகள் டாடாவின் மனதில் இன்னும் இருக்கின்றன.

இவரது அப்பா, ரத்தன் என்ன செய்ய விரும்பினாலும் அதற்கு மாற்றாக எதையாவது சொல்வாராம். வயலின் கற்க விரும்பினால் பியானோ கற்கச் சொல்வார். அமெரிக்காவில் படிக்க விரும்பினால் இங்கிலாந்திலேயே படியேன் என்பார். ரத்தன் ஆர்க்கிடெக்ட் ஆகவிரும்பினார். ஆனால் அவரது அப்பா இவரை எஞ்சினியரிங் படிக்கச் சொன்னார்.

”பாட்டி மட்டும் இல்லையென்றால் நான் அமெரிக்காவில் கார்னல் பல்கலைக் கழகத்தில் படிக்க வந்திருக்கமாட்டேன். அவரால்தான் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் சேர்ந்தாலும் பிறகு நான் விரும்பியபடியே ஆர்க்கிடெக்சரில் டிகிரி முடித்தேன்,” என்கிறார் ரத்தன்.

அப்பாவுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் பாட்டி எல்லாவற்றையும் சமாளித்தார். ரத்தனும் விரும்பியதை செய்தார். பெரிதாக சண்டைபோடாமல் அதே சமயம் சுயமரியாதையை இழக்காமல்.

கல்லூரி முடித்ததும் ரத்தன் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நிறுவனத்தில் ஆர்க்கிடெக்ட் ஆக இரு ஆண்டுகள் வேலை பார்த்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

“அப்போது எனக்கு ஒரு காதல் இருந்தது. அந்த பெண்ணை மணந்துகொள்ள விரும்பினேன்.  அப்போது என் பாட்டி உடல் நலமின்றி இருந்தார். அவரைப் பார்க்க நாடு திரும்ப விரும்பினேன். நான் நேசித்த பெண்ணும் இந்தியாவுக்கு என்னுடன் வருவாள் என்று எண்ணினேன்,. ஆனால் அது 1962 சீனப்போர் சமயம். அவளுடைய பெற்றோர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த உறவு முறிந்துவிட்டது” என்கிறார் அவர்.

 காதல் தோல்வி என்று வந்துவிட்டால் டாடா கூட தப்ப முடியாது!



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...