???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராட்சசி விமர்சனம்: பள்ளியும் பாடமும்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   06 , 2019  00:11:43 IST


Andhimazhai Image
அறிமுக இயக்குநர் கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ்,  ஹரிஷ் பெரடி, சத்யன், அருள்தாஸ், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ராட்சசி' இன்று திரைக்கு வந்திருக்கிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
 
முறையற்று இயங்கிக்கொண்டிருக்கும் கிராமத்து அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் ஜோதிகா. மோசமான நிலையில் பள்ளி இயங்குவதற்கு காரணமான ஆசிரியர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை எதிர்கொள்ளும் ஜோதிகா, பள்ளியை மேம்படுத்தும் பணியில் இறங்குகிறார். இந்த பயணத்தில் அவர் சந்திக்கும்  சவால்கள், தடைகளை கடந்து ஜோதிகா இலக்கை அடைந்தாரா என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்லும் படம்தான் ராட்சசி.
 
 பல இடங்களில் கடமைக்காக மட்டும் இயங்கும் அரசு பள்ளிகளை மேம்படுத்த வலியுறுத்தும் மையக் கருத்தை, சுவாரசியம் குறையாமல் பார்வையாளர்களிடம் சேர்க்க வேண்டுமென்பதில் கடைசிவரை உறுதியாக இருந்திருக்கிறார் இயக்குநர் கெளதம் ராஜ். கவனமாக அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு சரியாக பொருந்துகின்றனர்.
 
 முதல்பாதி முழுமைக்கும் ஓய்வில்லாமல் செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் நிதானமாக நகர்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் இப்படி ஒரு தலைமை ஆசிரியர் இருக்க வேண்டுமென்கிற எண்ணத்தை படம் நெடுலிலும் ஜோதிகா ஏற்படுத்துகிறார். அவ்வகையில் அடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் பாரதிதம்பியின் வசனம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. திரைக்கதை, நேர்த்தியான கதாபாத்திர அமைப்புக்கு பிறகு ராட்சசியின் மிகப்பெரிய பலமாக இந்த தெறிக்கும் வசனங்கள் இருக்கின்றன.
 
 ஒருபுறம் பார்வையிலும், உடல்மொழியிலும் ஹரிஷ் பெரடி மிரட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் கதிர் கதாபாத்திரத்தில் வரும் சுட்டிப் பையன் மழலைத்தனமான உணர்வுகளால் ரசிக்க செய்கிறான். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு பள்ளிகள் எப்படியெல்லாம் ஆக்கபூர்வமான பாதைக்கு திரும்ப முடியுமென்பதற்கு இப்படம் பல்வேறு யோசனைகளை வழங்குகிறது. 
 
கற்பித்தல் முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள், மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் அணுகுமுறை போன்றவற்றை ராட்சசி நுட்பமாக கையாண்டிருக்கிறது. கல்வி வியாபாரத்துக்காக அரசு பள்ளிகளை சாமானிய மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் தனியார் பள்ளி மாஃபியாக்களின் சதிகளையும் இப்படம் தோலுரிக்கிறது. மேற்கண்ட இந்த அனைத்து பகுதிகளையும் அயர்ச்சியளிக்கும் பிரசார தொனியில் சொல்லாமல் நேர்த்தியான, விறுவிறுப்பான சட்டகத்தில் பொருத்திய விதத்தில் இயக்குநர் வெற்றிப்பெற்றிருக்கிறார். அவரின் இந்த முயற்சிக்கு ஜோதிகா முதல் இதர கலைஞர்கள், ஷான் ரோல்டன் வரை அனைவரும் வலுசேர்த்திருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட மையக்கருத்திலும், அதனை காட்சிப்படுத்திய விதத்திலும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சிறந்த பாடமாக அமைந்திருக்கிறது ராட்சசி.

English Summary
Ratchasi movie review

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...