???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   11 , 2019  06:34:45 IST


Andhimazhai Image
புகழ் வெளிச்சத்தில் சிக்கிக்கொண்டு அல்லல் படுகிற பல பிரபலமான நட்சத்திரங்களை நான் சந்தித்திருக்கிறேன் ஆனால் எந்தவித பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்ளாமல் தன் வாழ்க்கையை மிக எளிமையாக கடந்து வெற்றிகரமாக அடைந்தவர் தான் இயக்குநர் அருண்மொழி.
 
 
எண்பதுகளின் தொடக்கத்தில் நான் அருண்மொழியை சந்தித்த விதம் வித்தியாசமானது அவர் ஏழாவது மனிதன் என்ற படத்தில் வசனகர்த்தாவாக எனக்கு அறிமுகமானார் .  அந்தப் படத்தில் கதாநாயகனாக பணியாற்றிய ரகுவரன் அவர்கள் அண்ணா சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அதற்கு அருகாமையில் இன்றைக்கு வளர்தொழில் ஆசிரியராக உள்ள ஜெயகிருஷ்ணன் அவர்கள் அங்கேயே தங்கியிருந்தார். 
 
 
அவர் அறையில் நான் அடிக்கடி வந்து போனபோது ரகுவரனை சந்தித்திருக்கிறேன். ஏழாவது மனிதன் படம் ஓடுவதற்கு பரீக் ஷா ஞானி ஒரு அட்டையில் திரைப்படம் வெளிவந்த போஸ்டரை தாங்கிக்கொண்டு அண்ணா சாலையில் நடந்து சென்று உதவியது எனக்கு நினைவிருக்கிறது. 
 
 
அருண் மொழியை அப்போதுதான் நேரடியாக சந்தித்து பேசுகிறேன் . பேசிய சில மணித்துளிகளில் மனதுக்கு மிகவும் நெருக்கமாக விட்டார். திரைப்படத்தின் மீது அளப்பரிய பற்று அவருக்கு இருந்தது. பெரும்  பொருட் செலவில் படங்கள் எடுப்பதை வெகுவாக கண்டிப்பார்.சபையர் தியேட்டர் இப்போதுள்ள அமெரிக்க தூதரகம் முன்பு இருந்தது. 
 
 
அதனுள் மூன்று திரை அரங்கங்கள் இருந்தன. ப்ளூ டைமண்டில் சுழற்சியாக ஒரே படம் ஓடும். காலையில் ஒரு டிக்கெட்வாங்கிக்கொண்டு தொடர்ச்சியாக பல காட்சிகள் பார்த்து ரசித்துள்ளோம்.  அருண்மொழி அசராமல் பார்த்து அந்தப் படத்திற்கு விளக்கம் அளிப்பார். ’ஷ்யாம் பெனகலில் மந்தன்’ என்ற படம்   அப்படி பார்த்ததுதான்.
 
 
மந்தன் கூட்டுறவு தொழிலாளர்களின் பணத்தில் எடுக்கப்பட்ட படம். அருமையான படம். சமூகப் பிரச்சனைகள் தாங்கி வருகிற படங்களே அவருக்குப் பிடித்தமானவை. புனேவில் திரைப்பட கல்லூரியில் படித்ததால்தானோ என்னவோ தான் சார்ந்த சினிமாவுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று கருதினார். 
 
 
’அவள் அப்படித்தான்’ இயக்கிய ருத்ரைய்யா விடம் பணியாற்றிய சூழலும் அப்படித்தான் அமைந்தது. அதன் விளைவு கருத்தாக்கமுள்ள ’காணிநிலம்’, ’ஏர்முனை’ படங்களை  இயக்கினார். பல ஆவணப்படங்களின் இயக்குநராக எவரிடமும் சமரசம் செய்துகொள்ளாமல் தனக்கேற்ற வகையில் மாற்றிக்கொண்டார் .
 
 
91ல் சென்னையில் நடந்த உலகத்திரைப்பட விழா பத்து நாட்கள் நடந்தது. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல்  பார்த்தேன் . அதில் ஈரானிய படங்களைப் பார்க்கத் தூண்டியவர் அருண்மொழிதான்.அவ்வப்போது சுடச்சுட விமர்சனத்தை ஒளிக்காமல் கொட்டி விடுவார். கமர்ஷியல் படங்களில் மனம் ஒட்டாத அருண்மொழி தனக்கான ஆளுமையை நாடகப் பட்டறை துவக்கி வெற்றி கரமாக நடத்துவார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.
 
 
ஸ்தானிஸலாவிஸ்கி என்று பெயர் வைத்து அவர் நவீன பாணியிலான நாடக ங்களை பல மேடைகளில் அரங்கேற்றியுள்ளார் .ஒரு சமயம் என்னை நாடக ரிகர்ஸலுக்கு அழைத்தார். இரவு நேரம். கே கே நகர் அருகில்  ஒரு விளையாட்டு மைதானம். எங்கே என தேடிப்பார்த்தால் ஒரு விளக்கு கம்பத்தின் வெளிச்சத்தில் பலமாணவர்களை வைத்து பயிற்சி மேற்கொண்டார்.
 
 
பெண்கள் ஆண்கள் என எந்த பேதமுமின்றி உரக்க வசனங்கள் பேசி உடல்அசைவுகளின் மூலம் நடித்துக் காட்டி கொண்டிருந்தனர். அடர்ந்த காடு என்றால் ஒரு உடல் மொழி. பயணம் என்றால் வேறு அசைவு மொழி .
கவிஞர் ரவி சுப்பிரமணியனுக்கு விருது அளிக்கும் விழாவில் சிறுகதை ஒன்றை அரங்கேற்ற நடக்க ஒத்திகை பார்த்துக் கொண்டிருதனர்.
 
 
உற்சாகமாக செய்து கொண்டிருந்த நிகழ்வு அப்படியே வங்காள மேடை உத்திகளை எனக்கு நினைவூட்டியது.ஒத்திகைக்கு முதலில் நல்ல இடச் சூழல் வேண்டும். ஆனால் பொதுவெளியில் நடத்துவது என்பது ஆச்சரியம். கொஞ்சம் கூட சங்கடப்படாமல் அதையே தனது பலமாக மாற்றிக் கொண்டார். அதோடு மொழித்திறன் வெளிப்பாடு என்பதில் மிக உறுதியாக இருந்தார்.
 
 
நாடக ஒத்திகை முடிவில் என் கருத்தை கேட்டார்.  மாணவர்களிடம் அதை வெளிப்படுத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்றார். இது எல்லோருக்கும் வந்துவிடுகிற குணம் அல்ல. நான்தான் எல்லாம் என்று பெருமிதத்துடன் திரிகிற உலகத்தில் அனைத்து தகுதிகளைப் பெற்றிருந்த அருண்மொழி எளிதாக தன்னை வைத்திருந்தார் .பெசண்ட் நகர் பீச் சில் அடிக்கடி இது போன்ற நாடகங்களை மக்கள்முன் 
நடத்தினார்.
 
மக்களுக்கான கலை என்பதில் அவருக்கு தனி அலாதிப் பிரியம்.சென்ற வாரம் பாஃப்டா திரை அரங்கில்( தனிக்காட்சி) இன்ஷா அல்லா என்ற திரைப்படத்தின் போது சந்தித்துப் பேசினேன் . கொஞ்சமும் மாற்றமில்லாமல் அந்தப் படத்தின் கலைஞர்களை வெகுவாகப் பாராட்டிப் பேசினார் . அந்தப் படத்தின் கதை என்பது இரண்டு சிறுகதைகள் ஒட்டி யது. ஆனால் அதை சொல்லுகிற முறை உலக சினிமா மொழி அளவுகோல். எனக்கு இன்னமும் புரியாத ஒன்று உலகப் பார்வைக்கான திரை மொழி. மெதுவான காட்சிக் கோர்வைகள் . அருண்மொழி அதை உள்வாங்கி சொன்னார்.
 
 
உள்ளதை உள்ளவாறே காண்பிப்பது ஒரு வகை. கொஞ்சம் புனைவு சேர்த்து பார்வையாளர்கள் திகைக்க சொல்வது இன்னொரு வகை. மூன்றாவது பார்வையாளர்கள் படம் பார்ப்பதில் ஈடுபாடு செய்து தனக்குள் பல நிகழ்வுகளை உருவாக்குவது. அதை உலக சினிமா செய்கிறது. வியாபார நிர்ப்பந்தமின்றி படம் எடுத்து ஒரு கலைஞனாக மகிழ்வது என்பது தனி வகை என்று விளக்கி பொறுப்பாக பேசினார்.எவரையும் சங்கடப்படுத்தாது புன்னகையோடு கடந்து செல்கிற மனப்பாங்கு அவருடையதாக  இருந்தது.
 
 
மலிவான ரசனையை அடியோடு நிராகரித்துத் தள்ளினார் . கமலோடு அவர் ஒரு படத்தில் பயணித்ததை பகிர்ந்து கொண்டு என்னை வியந்தார். எப்படி உங்களால் அவ்வளவு காலம் முடிந்தது . அவரின் எண்ணங்கள் நேரத்துக்கு நேரம் மாறுபாடு கொண்டதாயிற்றே என்று சொன்னார்.
 
 
கலைஞர்களின் உலகம் தனியானது. அதில் மாற்றங்கள் என்பது மேம்பாட்டிற்கான தேடல் என்பதுதான் எனது புரிதல்.அருண்மொழிக்கு தேசிய உணவு தேநீரும் சில பிஸ்கட்டுகளும். இது இருந்து விட்டால் போதும் மணிக்கணக்காக சினிமா பற்றி பேசிக் கொண்டிருப்பார். 
 
 
அவரோடு பயணித்த சமயங்களில் இதுவே நிகழ்வு.பணம் சம்பாதிப்பதில் பெரிய நாட்டம் இல்லை. ஏன் வெகுஜனப் படங்கள் பக்கம் செல்லவில்லை என்பதற்கு இந்த மனநிலையும் காரணம்.வாழ்க்கை எல்லோரும் திரும்பிப் பார்த்து வியப்பதற்காக ஓடுவது ஒரு வகை. தன்மனதுக்கு சரியென்று படுவதை செய்து அதற்கு கிடைக்கும் அங்கீகாரம் போதுமென்று நினைத்து வாழ்வது இன்னொரு வகை.இதில் அருண் மொழி இரண்டாவது ரகம்.
 
 
 துணைவியாரின் தங்கை மகனுக்கு திருமணத்திற்காக புதுவைக்கு சென்றிருந்தென். அதற்காக சில நாட்கள் முன் சென்று உதவி செய்து கொண்டிருந்தேன். சனிக்கிழமை  சிவன் கோவிலில் திருமண வேலைகளுக்கான செயலில் இருந்த போது நாசரின் துணைவியார் கமீலா அலைபேசியில் அழைத்து அருண்மொழி சற்று நேரம் முன் இயற்கை எய்தினார் என்றார். நிலை குலைந்து விட்டேன்.சில நாட்களுக்கு முன்தான் அப்படி சிரித்து அளவளாவினேன். எப்படி என்றேன்.
 
 
ஜப்பானிய திரைப்பட விழா தன் சக மாணவர்களுடன் சென்று படம் பார்த்த போது ஓய்வறைக்கு சென்றவர் மாரடைப்பால் காலமாகி விட்டார்.புரியவில்லை மரணத்திற்கு என்னதான் வந்தது. சிந்தனையாளர்களுக்கு மரணம் கொஞ்சம் இரக்கம் காட்டலாம்.நாசருக்கு தகவல் தெரியுமா என்று கேட்டேன். அவர் நிலைகுலைந்து உணர்ச்சி வசப்பட்டுள்ளார். என்றார்.நட்பின் பிரிவு அது.கூடுதலாய் ஒரு தகவல் சொன்னார்.
 
 
நாசரை பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தி கல்யாண அகதிகள் திரைப்படத்தில் நடிக்க காரணம் அருண்மொழிதான் என்றார். அருண்மொழி தான் வாழ்ந்த வாழ்வில் நிறைவாக இருந்தார் என்று தான் நம்புகிறேன் . ஒரு கலைஞனின் வாழ்வு நிறைய கலைஞர்களை உருவாக்குவது என்பதுதான் எனில் அருண்மொழி வாழ்கிறார். அருண்மொழி வாழ்வு பரிசுத்த கலைஞனின் வாழ்வு. அவர்  என் மனதில் நீண்ட காலம் பேசிக்கொண்டிருப்பார்.
 
 
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...