???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழி திணிப்பை அதிமுக அரசு ஏற்காது: அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0 எஸ்.பி.பி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை: எஸ்.பி.பி சரண் விளக்கம் 0 மனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன்: அனில் அம்பானி 0 திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு 0 புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு 0 அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது! 0 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் 0 வேளாண் திருத்த மசோதா சட்டமானது! 0 ராஜிவ் காந்தி சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு 0 பஞ்சாப்பில் விவசாயிகள் 3-வது நாளாக ரயில் மறியல் போராட்டம் 0 திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை: போலீசார் விசாரணை 0 பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி 0 தமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று 0 ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பொருள் இருப்பு அதிகம் வைத்திருக்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அபராதம்: தமிழக அரசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 27- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   16 , 2020  00:34:48 IST

 ‘பழையன கழிதலும்
பதியன புகுதலும்
வழுவல கால வகையினானே’
 

காலத்திற்கு மட்டுமல்ல நமக்கும் இதுதான். நாம் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறோம் நாம் மட்டுமே எப்போதும் பேசு பொருளாக இருக்க வேண்டும். தன்னைச்சுற்றியே நாட்கள் நகர வேண்டும் என்று நினைத்து போராடுகிற மனிதர்கள் மேலே சொன்ன சொற்களை கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொண்டால் நலமாக இருக்கும். இல்லை என்றால் புதிய சிந்தனைகளின் வரவு தானாக பின்தள்ளி முன்னேறி சென்றுவிடும்.
 

இதை எதற்காக இங்கே சொல்கிறேன் என்றால் வாழ்கிற காலத்தில் நாம் காணுகிற படைப்பாளர்களை நல்உள்ளம் கொண்ட வல்லவர்களை பிறருக்கு அறிமுகம் செய்து வைத்து மகிழ்வோடு பயணப்படுதல் வேண்டும். அந்த நோக்கத்தில் இன்று நான் இங்கே முன்மொழிவது கே. பாலமுருகன் என்கிற மலேசியப் படைப்பாளி. பள்ளி ஆசிரியர். சிறுவர்கள் மீது தீராப் பற்றுகொண்டு சிறுகதை , அறிவியல் புனைவு நாவல், கவிதைகள் என தொடர்ந்து எழுதுகிறார். அவரின் கவிதை ஒன்று :


 “கதவிடுக்கில்
நாற்காலி ஓரங்களில்
கட்டிலுக்கடியில்
எப்பொழுதாவது கிடைக்கின்றன
நம்மைப் பற்றிய
ஒரு சிறு தொகுப்பு.

அம்மாவிற்குப் பயந்து
அப்பாவின் பார்வையிலிருந்து மறைக்க
தம்பியின் பிடிவாதத்திலிருந்து தப்பிக்க
சடாரென்று வந்த விருந்தாளிகளின்
கண்களில் படாமல் இருக்க
இப்படி
சில கணங்களில்
நம்மை நாம்
ஒளித்து வைத்துவிடுகிறோம்.

சேகரித்துப் பார்க்கிறேன்
நான் எத்தனை நான்களின்
நான்கள் என்று.” பாலமுருகன் எனக்கு எப்படி அறிமுகம் ஆனார் என்பதே ஒரு சுவாரசியமான கதை. எனது சிறுவர்களுக்கான திரைப்படம் 2009 -இல் வெளியானது. அந்த சமயம் மலேசியா ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி புதிதாக ஆஸ்ட்ரோ தங்கத் திரை சேனல் ஒன்று துவங்கியது. அந்த சேனலில் திரைக்கு வந்து சில வாரங்கள் ஆன திரைப்படங்களை போடுவது பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

 

அந்த வரவேற்பின் வேளையில் என்னுடைய வண்ணத்துப்பூச்சி ஒருமாதம் அந்த சேனலில் ஓடியபடி இருந்தது. விருப்பம் உள்ளவர்கள் அதை பணம் கட்டி வீட்டிலேயே பார்க்கலாம். என்னுடைய படம் மலேசியத் தியேட்டர்களில் வெளியிடாத சூழலில் பெரும்பாலோர் இதை சேனலில் பார்த்திருக்கிறார்கள் என்பதை என் மலேசியப் பயணம் உறுதி செய்தது.
 


சிலர் என் எண்ணைத்தேடி மலேசியாவிற்கு வாருங்கள் ஒரு திரைப்படம் பண்ணலாம் என்று அழைக்க அந்த வேண்டுகோளை ஏற்று இந்த மகாகலைஞன் சென்றேன். விமான நிலையம் இறங்கி தொடர்பு கொள்ள அழைத்த மகானுபவன் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார். பல மணி நேரம் காத்திருந்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த பின் ஏர்போர்ட் தமிழன் ஒருவரிடம் விஷயத்தை சொன்னேன்.
 

 

ஏன் இப்படி ஏமாந்தீங்க என்று கேட்ட அவர்,  ‘டத்தோஸ்ரீ தியாகராஜன் ஓட்டல் கோலாலம்பூர் மெயினில் உள்ளது அங்கே போய் தங்குங்கள் பாதுகாப்பு,’ என்று சொல்லி டாக்ஸி பிடித்து அனுப்பினார் . அங்கு போன பின் இரவெல்லாம் விழித்து என்ன இப்படி ஆள் தெரியாத ஊரில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறோமே என்று என்னை நானே கோபித்துக் கொண்டேன். யானைக்கும் அடி சரக்கும் கதைதான். என்னதான் விவரமான ஆள் என்றாலும் காலம் புதிய பாடங்களைக் கற்றுத்தர தயங்குவதில்லை. மறுநாள் காலை எழுந்தவுடன் கடைத்தெருவில் விற்ற மக்கள் ஓசை மற்றும் இன்னொரு பத்திரிகை தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டு பேசினேன். உடனே அலுவலகம் வாருங்கள் என்று அழைத்து பேட்டி எடுத்து வெளியிட்டனர். அதைப்பார்த்து நிறைய தமிழ் ஆர்வலர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அழைத்தனர்.

 


அய்யோ இதில் எத்தனை பேர் நிஜம் யாரை நம்புவது என்ற பயம் தொற்றிக்கொண்டது. குழம்பினேன். அந்த சமயத்தில்தான் கே. பாலமுருகன் போன் செய்து எங்கள் பள்ளிக்கு வந்து உரையாற்ற இயலுமா என்றார். கொஞ்சம் நம்பிக்கை வர “ சார் நிறைய பேர் கூப்பிடறாங்க “ என்றேன். எத்தனை நாள் உங்க டூர் என்றார். என்ன சொல்வது?... இருக்கலாம், என்றேன்.


‘சரி இரண்டு வாரத்துக்கு பிளான் பண்றேன்,’ என்றார். என்னை அழைத்தவர்களை எல்லாம் அவரிடம் பேசச் சொன்னேன். அடுத்த நாளே கல்வி அமைச்சரிடம் முறையாக அனுமதி பெற்று பள்ளிகளில் பேசும் விழாக்களை  ஏற்பாடு செய்து அட்டவணைப் படுத்தி அனுப்பினார்.முதல் நாள் இரவு கோலாலம்பூர் குளிர்சாதனப் பேருந்தில் ஏறி நள்ளிரவு ஈப்போ சாலையில் இறங்குகிறேன்.காரை வைத்துக்கொண்டு தனியாக வரவேற்கிறார் ஒரு பெண்மணி. பயந்தபடியே ஏறிச் செல்கிறேன். அரைமணி நேர பயணத்திற்குப்பின் வீடு வந்தது. அட என்ன ஆச்சர்யம் அந்த பெண்மணியின் கணவர் அழகு தமிழில் வரவேற்று சாப்பிட தயாராகிறார் . உங்களோடு சேர்ந்து சாப்பிட காத்திருந்தேன் என்கிறார். கூடவே அவரின் கல்லூரி படிக்கும் மகளும், பள்ளிபடிக்கும் மகனும் ஆமாம் என்கிறார்கள் . சாப்பிடுகிறோம். அப்போது சர்ப்ரைசாக என்னுடைய வண்ணத்துப்பூச்சி பட சிடி நல்ல பிரிண்டில் போட்டுக் காண்பித்து பரவசமடைகிறார்கள்.
நான், ‘ இதை வெளியிட உரிமை தரவில்லையே’ என பரிதாபமாகச் சொல்கிறேன். அட அப்படியா விடுங்கள் படம் பார்ப்பது முக்கியம் இல்லையா என்று கலகலவென சிரிக்கின்றனர்.
 

அது சரி?! பிறகு மூன்றுமணி வரை பேசிக் கொண்டிருந்து விட்டு படுத்து எழுந்தேன். காலை 8 மணிக்கு தமிழ் பாரம்பரிய திருமணம் நடக்கிறது வாருங்கள் அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு ஈப்போ தமிழ் பள்ளியில் உரையாற்றலாம் என்றார். சரி என தலையாட்டியபடி போனேன். ஒரு மலைப்பகுதிக்கு முன்னால் மாரியம்மன் ஆலயம். ஏதோ பொள்ளாச்சி பக்கத்துபாரம்பரிய கோவில் மாதிரி இருந்தது. 20, 30 காரில் ஏதோ படப்பிடிப்புக்கு வந்தது போல் வந்தார்கள். மேளதாளத்துடன் ஐயர் ஓத , தாலி கட்டி ஒரு மணி நேரத்தில் கலைந்து விட்டார்கள் அதில் ஒரு ஆச்சர்யம்,

 

அந்தக் கோவில் வளர்ச்சிக்கு உதவுபவர் யார் தெரியுமா? நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தான். பல்வேறு இடங்களில் அவரின் திருப்பணியைப்பற்றி வெகுவாக பாராட்டுகிறார்கள். அதன் பிறகு தமிழ்ப்பள்ளிக்கு சென்றேன். ஆர்வமாக இருந்த தமிழ் பள்ளி மாணவர்களுடன் உரையாற்றி கலந்துரையாடல் நிகழ்த்தினேன். பெரும்பாலான மாணவர்கள் எனது படத்தை பார்த்திருந்தனர். அதில் ஒரு பெண் எழுந்து தைரியமாய் சொன்னாள்.  “எங்க அப்பா அம்மா அவர்கள் வேலை பார்க்கிறார்களே ஒழிய என்னிடம் பேசுவதோ பழகுவதோ இல்லை. பணம் சம்பாதித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். நாங்கள் பள்ளிக்கூடம் முடிந்து தனியாகத்தான் வீட்டில் இருக்கிறோம்’’ என. அப்பள்ளி முதல்வர் மாரியம்மாள் இதை ஆமோதிப்பது போல், ‘ உலகம் இப்படித்தான் செல்கிறது. பிறகு எப்படி சமூகம் தமிழ்பண்பாட்டோடு உயரும்?’ என்று கவலைப்பட்டார்.


அவர் பாப் வெட்டி மாடர்ன் உடையிலும் இருந்தது நவீன வளர்ச்சியை காட்டியது. பள்ளி சுற்றுச் சுவர்கள் எங்கும் திருக்குறள், பொன்மொழிகள் என எழுதி தமிழ் உணர்வை வெளிப்படுத்தியது பாராட்டத்தக்கது. இப்படியாக கெடா மாநிலம் உள்நுழைந்ததுமே கே பாலமுருகன் ராஜ்ஜியம் துவங்கியது. தன்வீட்டிற்கு அழைத்துப் போய் உணவிட்டு பின் அங்குள்ள பள்ளிக்கு அழைத்துப் போய் பேச வைத்தார். பேசுவதற்குமுன் ஒரு குறும்படம் வெளிட்டார். என்னைப்பற்றிய படைப்புத் தகவல்கள் அப்போது வந்திறங்கிய காட்சிகளோடு மாணவர்களுக்கு திரையிட்டு அசத்தி விட்டார்.

 


ஆதித்தமிழர்கள் மலேசியக் காடுகளில் இன்னும் கூலி வேலை செய்து வாழ்கிறார்கள். அந்தப்பகுதி சிலவற்றிற்கு சென்று வந்தேன். பாலமுருகன் என்னோடு கலந்துரையாட அவரது இலக்கிய திரை உணர்வாளர்கள் நண்பர்களை வரவழைத்து விவாதக்களத்தையே உருவாக்கி விட்டார்.  திரையில் அவர்கள் கேட்கும் சமூகக் கடப்பாடு கேள்விகளுக்கு  எப்படி நாம் பொறுப்பெடுத்து பதில் சொல்வது என்று தெரியவில்லை. தமிழகத்தை வெகுவாக மதித்து எதிர்பார்ப்பதை இங்குள்ள படைப்பாளர்கள் உணரத்தான் வேண்டும்.

 

மறுநாள் ஆன்மீகமும் அன்பும் அறமும் கொண்ட ஒருவர் மலைமீது நடத்தும் அனாதைப் பிள்ளைகளின் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய் சுற்றிக் காட்டினார். அந்த தாளாளர் உடன் உரையாடியதில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். பணக்கார குடும்பத்தில் பிறந்த அவர் தனக்கென வாழாமல் திருமணமும் செய்து கொள்ளாமல் திக்கற்ற பிள்ளைகளுக்கு பள்ளி நடத்தி தன்வாழ்வை அவர்களுக்காக தியாகம் செய்வதை என்னவென்று சொல்ல?!


 அவரிடம் பேசிக்கொண்டே நீண்டது அந்த இரவு. அவரைச் சுற்றி சமூக அக்கறையும் இலக்கிய உணர்வு கொண்டவர்களையும் வைத்திருக்கிறார் என்பது நெகிழ்வான செய்தி. இயற்கையை நேசிக்கும் மலைப்பாங்கான சூழல் ஒரு ஆன்மீக குளிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு அவருடன் தங்கி விட்டு மறுநாள் சில பள்ளிகளுக்கு சென்று தமிழின் தொன்மை ,

 

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர் ஆசிரியர் பங்கு குறித்து விரிவாகப் பேசினேன். உண்மையில் பாலமுருகனுக்கு சிறுவர்கள் மீது தனித்த ஆர்வம் இயல்பாகவே மேலோங்கி இருந்தது. அவர் அதன்பின் குறிப்பிடத்தக்க நூல்கள் எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அறிவியல் கனவுருப்புனைவு நீல நிறக் கண்கள் என்ற அறிவியல் நாவலை எழுதினார். அரூ இதழில் வந்த அறிவியல் கதைகளைத் தொகுத்தார். 21 ஆம் நூற்றாண்டு கல்விமுறை ஓர் அறிமுகம் என்ற நூலும், படைப்பிலக்கியத்தின் குரல்கள் என்ற தொகுப்பும் , யார் அந்த மந்திரவாதி சிறுவர் சிறுகதைகளும், சுடரின் தமிழ்மொழி என்ற நூலும் மிக முக்கியமான நூல்கள்.

 

கடாரம் கொண்டான் என்று சொல்கிறோமே அந்த நகரம் மலேசியாவில் கெடா மாநிலத்தில் தான் உள்ளது . கடாரம் தான் கெடா வாக மாறி உள்ளது. போய் பார்க்க வேண்டும் என்று பாலமுருகனைத் துளைத்தெடுத்தேன். அவர் காண்பித்தது நாலு தூண்கள் பாதியாக உள்ள இடத்தை. அட டா என்ன இது சுற்றியும் காடு. வெட்ட வெளியில் நாலு கல் தூண் . ஏன் அந்த இருப்பிடத்தை தமிழ் அடையாளமாக மாற்றி சுற்றுலாத்தலமாக ஆக்கக் கூடாது?
எனத் தோன்றியது.
 

பாமாயில் பிரதேசமாக காட்சியளிக்கும் மலேசியா மண்ணில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை.கெடாவுக்குப் பக்கத்தில் பட்டயாவுக்குப் போய் மகிழ்வாக வரலாம். அது தாய்லாந்து.  பாலமுருகன் கிட்டத்தட்ட பயண நெறியாளருக்குண்டான தெளிவுகளோடே பயணப்பட்டார். அதோடு நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் வல்லினம் நண்பர்களையும் சந்தித்தேன். ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள காபி ஷாப்பில். கூடவே ஆர் ஜே மின்னல்  எம் எம் நண்பர் இருந்தார். அவருக்கு சினிமா மேல் அதிக ஆர்வம் இருந்ததை என்னால் உணர முடிந்தது.


 இப்படியாக கடந்து கொண்டிருந்த வேளைகளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் உள்பட சிவாஜி ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்த விழாவில் பேசினேன். காரில் வர ஒரு மணி நேரத்திற்கு மேல் சாலையில் தாமதம் ஆனது. வரும் வழியில் சாலை இடையூறால் ஒரு மணி நேரம் தாமதம் ஆகிறது என டிஜிட்டல் போர்டுகளில் விளம்பரம் செய்கிறார்கள். அதனால் வழியில் எவரும்
 

வாகனங்களில் முந்துவதோ கார் ஹார்ன் அடித்து அலற வைப்பதோ எதுவும் இல்லை. பழக்கப்பட்டு விட்டார்கள். நான்தான் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த இடைவெளி யில் பாலமுருகன் எழுதிய சிறுகதைகளை படித்துக் கொண்டு வந்தேன். அதில் ஒரு கதை நெஞ்சை உருக்கும். புயலின் போது மூழ்கும் வீட்டையும் அப்படி மூழ்கும் போது உண்டாகும் மனச் சிந்தனைகளையும் மிகச்சிறப்பாக எழுதி இருப்பார் . அதை நான் எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்று பெப்பர்ஸ் டிவியில் எழுத்தாளர் கணேஷ்பிரபு கேட்ட போது விவரித்தேன்.
 

மலேசியக் கலைஞர்கள் உடன் பேசும் போது மலேசிய மண் மக்கள் சார்ந்த படைப்புகளையும் கலைஞர்களையும் உருவாக்கி உலக அரங்கில் அடையாளப்பட முனைய வேண்டும் என்றேன். அதை ஏற்றுக் கொண்ட இயக்குனர் விஜயசிங்கம் அதன்படி இப்போதும் பல படங்கள் நாடகங்கள் நடத்திக் கொண்டு வருகிறார் .


 அந்த நிகழ்வின் நீட்சியாக மலேசியத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் குடும்பத்தோடு ஒரு உணவு அளித்தார். அவரின் துணைவியார் தமிழாய்வு கவிதைகள் பற்றி செய்ய அதில் எனது கவிதைகளும் உள்ளதென சொல்ல மகிழ்வு இரட்டிப்பானது. (அட டே சிறப்பான செய்தி காதில் வந்து விழுகிறதே! அப்போது நான் சந்தித்த மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் அவர்களுக்கு தமிழக அரசு 2019 ஆம் ஆண்டுக்கானுலகத் தமிழ் சங்க விருது அளித்து பாராட்டியுள்ளது!) மறுநாள் மின்னல் எப்எம் பேட்டி., நெறியாளர் மாறனோடு ஒரு பேட்டி, ஆஸ்ட்ரோ டிவி ராஜாமணியோடு கலந்துரையாடல் என கடந்தது. நான் எழுதிய பிள்ளைகள் விரும்பும் பெற்றோராக என்ற வாழ்வியல் நூல் பலரையும் ஈர்த்தது.


 பிறகு சில ஆண்டுகள் கழித்து பாலமுருகனை சென்னை வடபழனியில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன். இப்போது அவரின் பார்வை விரிவு பட்டிருந்தது. திரைஆளுமை பதிய வரவுகளோடு தனது எண்ணங்களை முன் வைத்து பயணிக்கிறார். மலேசியா என்பது நம் மண்ணின் நீட்சி என்பது அவர்களின் தொடர்புகளும் படைப்புகளும் அடையாளம் காட்டுகின்றன.
 

 பல்வேறு இலக்கியக் குழுக்கள் பல்வேறு கண்ணோட்டங்கள் நம் தமிழகத்தைப் போலவே உள்ளது. எனினும் தமிழ் என்ற ஒற்றை சொல்லில் ஒன்றுபட்டு வாழ்கிறார்கள் என்பது உண்மை. அட சொல்ல மறந்து விட்டேனே ஈப்போவில் நண்பர் ஒருவர் குதிரை ரேஸ்க்காக ஏழெட்டு குதிரைகளை வளர்க்கிறார். அந்தக் குதிரையோடு கொஞ்ச நேரம் பேசினேன். அதை எப்படி எழுத பாலமுருகன்.?

 

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...