???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் பாலியல் வல்லுறவு புகார்!

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   03 , 2018  00:26:08 IST

பாலியல் குற்றச்சாட்டு காரணமாக மத்திய வெளியறவு இணையமைச்சர் பொறுப்பில் இருந்து எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்த நிலையில், பல்லவி கோகாய் என்ற பத்திரிகையாளர் அக்பர் மீது பாலியல் வல்லுறவு புகாரை கூறியிருக்கிறார். இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் இதழில் எழுதியிருக்கும் பல்லவி, அக்பரின் கீழே பணியாற்றியபோது அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். 
 
 
இந்தநிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அக்பர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
 
1994-ம் ஆண்டின்போது, பல்லவி கோகாயின் முழு சம்மதத்துடன்தான் அவருடன் உறவு வைத்திருந்தேன். இது சில மாதங்களுக்கு நீடித்தது. இந்த உறவு எங்களது வீட்டில் பிரச்னையை ஏற்படுத்தியது. பின்னர் கோகாய் உடனான உறவை நிறுத்தி விட்டேன். இந்த நிகழ்வு என் வாழ்வில் குறிப்பிடும்படியான ஒன்று அல்ல. இவ்வாறு அக்பர் கூறியுள்ளார்.
 
அவருக்கு ஆதரவாக மனைவி மல்லிகா அக்பரும் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது கணவருக்கும் பல்லவி கோகாய்க்கும் இருந்த உறவு குறித்து எனக்கும் தெரியும். இரவில் அவர் என் கணவரை தொலைபேசியில் அழைப்பார். பொதுவெளியில் இருவரும் சுற்றித் திரிந்தனர். இதுபற்றி கணவரிடம் நான் சண்டையிட்டேன். பின்னர் அவர் திருந்தி குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தார்” என்று கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...