???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தீபிகா படுகோனின் வீடு இருக்கும் கட்டடத்தில் 7 லட்சம் வாடகையில் குடிபுகுந்த ரன்வீர் சிங்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   02 , 2020  01:48:36 IST

மும்பையில் தீபிகா படுகோனின் சொந்த வீடு இருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் அவரது கணவர் ரன்வீர் சிங் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார்.
 
நடிகர் ரன்வீர் சிங் - நடிகை தீபிகா படுகோனுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணமானது. மும்பை பிரபாவதியில் உள்ள பவ்மாண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் தீபிகா படுகோனின் சொந்த வீடு உள்ளது. இந்நிலையில், அதே கட்டடத்தில் மூன்று ஆண்டுகளுக்கான வாடகை ஒப்பந்தத்தில் ரன்வீர் சிங் ஒரு வீட்டை எடுத்திருக்கிறார்.
 
முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 7.25 லட்சம், பிறகு மாதம் 7.97 லட்சம் வாடகை ஒப்பந்தத்தில் ரன்வீர் சிங் இந்த வீட்டை எடுத்திருக்கிறார். இதே கட்டடத்தில் உள்ள தனது வீட்டை கடந்த 2010-ல் தீபிகா படுகோன் 16 கோடிக்கு வாங்கினார்.
 
ரன்வீர் சிங்கின் இந்த வீடு விவகாரம் பாலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. 1983-ல் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றதை மையமாக வைத்து உருவாக்கப்படும் '83' படத்தில் இப்போது ரன்வீர் கபில் தேவ் பாத்திரத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சப்பாக்' படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...