![]() |
நீதிபதிகளை இழிவுபடுத்தியதாக இலங்கை முன்னாள் அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனைPosted : புதன்கிழமை, ஜனவரி 13 , 2021 01:32:36 IST
நீதிபதிகளை இழிவுபடுத்தி பேசியதற்காக இலங்கை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ரமநாயக்கவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்நாட்டு விமானப் படை அதிகாரி மகல்கண்டே சுதந்தா தெரொ என்பவர் தொடுத்த வழக்கில் ரஞ்சன் ரமநாயக்கவுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் ரமநாயக்க, நாட்டில் உள்ள பெரும்பான்மையான நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஊழல் கரைப்படிந்துள்ளனர் என்று கூறியதாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னால் அமைச்சரான ரஞ்சன் ரமநாயக்க இலங்கை சினிமா மற்றும் தொலைக்காட்சியில் நடிகராகவும் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
|
|