![]() |
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகைPosted : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 06 , 2015 06:40:32 IST
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் பயணமாக வரும் 14-ஆம் தேதி இந்தியா வருகிறார். பிரதமரான பின் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் உள்ளிட்டோரை சந்தித்து ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
|
|