![]() |
தீர்மான விவரம்: இலங்கை நீதித்துறை அமைச்சர் தகவல்Posted : சனிக்கிழமை, ஜுலை 09 , 2022 18:08:43 IST
இலங்கையின் கொந்தளிப்பான சூழலில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கட்சிகளின் கூட்டத்தை சபாநாயகர் அபேவர்த்தன கூட்டியிருந்தார். அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே காணொலிக்காட்சி வழியாகப் பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய பெரும்பாலான தலைவர்கள், பிரதமர் இரணிலும் தன் பதவியிலிருந்து விலகவேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அவரோ பதவிவிலக மறுத்ததாகவும் அதற்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக சபாநாயகர், தற்காலிக அரசுத்தலைவராகப் பதவியேற்கவேண்டும்; அதையடுத்து நாடாளுமன்றத்தைக் கூட்டி அனைத்து கட்சிகளும் அடங்கிய தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும்; நாடாளுமன்றத்தின் மூலம் இடைக்கால அரசு அதிபர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதைத் தெரிவித்த நீதித்துறை அமைச்சர் விஜயதாச இராஜபக்சே, இரணிலுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை உறுதிப்படுத்தினார். English Summary
Ranil should stepdown as PM Lanka all party meeting 09-07-2022
|
|