???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரம்ஜான் சிறப்புக் கட்டுரை: அது ஒரு நிலாக்காலம்! - ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   15 , 2018  05:47:48 IST


Andhimazhai Image
ம்ஜான் நோன்பும், ஈகைத் திருநாள் என்கிற ரம்ஜான் பண்டிகையும் குதூகலத்தையும், உற்சாகத்தையும் கொடுத்த குழப்பங்கள் எதுவும் இல்லாத காலம் அது.! சிறுவர் – சிறுமியர் முதல் மூன்று நோன்பும், கடைசி மூன்று நோன்பும் வைத்தால் போதும் என்று சொல்லி ஆறு நோன்புகளை மட்டும் நோற்கச் சொல்லுவார்கள். இது முப்பது நோன்புகளும் நோற்பதற்கு சமம் என்று சில பெரியவர்களும் இதை அப்போது கடைபிடிப்பார்கள். சில சிறுவர்கள் யாருக்கும் தெரியாமல் தண்ணீர் குடித்து விடுவார்கள். அதுமட்டுமல்ல, சுரக்கும் எச்சியை (உமிழ் நீர்) விழுங்கக் கூடாது என்று புளிச்.. புளிச் என்று சதா துப்பிக் கொண்டே இருப்பார்கள். தான் நோன்பு வைத்திருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்பதற்காகவும் இதை வேண்டுமென்றே சிறுவர்கள் செய்வார்கள்.
 
 
நோன்பின் சிறப்பை – மாண்பை பற்றியெல்லாம் முழுமையாக தெரியாத  காலம் அது. இப்போது அப்படியல்ல. ஒரு மாத காலம் நோன்பு நோற்பது என்பது  பசியை உணருவதற்கு மட்டுமல்ல , இறை அச்சத்திற்காகவும், இரவில் நீண்ட நேரம் நின்று இறைவனை வணங்குவதும், தான தர்மங்கள் செய்வதும், ஒழுக்க மாண்புகளுடன்  காலம் முழுக்க ஐவேளை இறைவனை வணங்குவதற்கான பயிற்சியும்தான் இந்த ஒரு மாத கால நோன்பு நோற்பது என நோன்பின் சிறப்பு குறித்தும்- மாண்பு குறித்தும் அது தொடர்பான இறைவனின் கட்டளைகள் குறித்தும்- நோன்பு குறித்து நபிகள் நாயகம் சொன்ன ஹதீஸ்கள் எல்லாம் இப்போது எல்லோரும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் கட்டாய கடமையான இந்த ரமலான் நோன்பை எல்லோரும் இப்போது நோற்கிறார்கள். பிற மத சகோதர்களுக்கும் கூட இப்போது முஸ்லிம்களின் இந்த ரமலான் நோன்பு குறித்து தெரிந்திருக்கிறது என்பது சிறப்பான விஷயம். ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட மகிழ்ச்சியுடன் சுணக்கம் இல்லாமல் இன்று நோன்பு நோற்கின்றன.. என்னுடைய பேத்திகள் ஒரு மாத கால நோன்பை முழுமையாக தொடர்ந்து நோற்கிறார்கள்.
 
 
நான் சிறுவனாக இருந்த அன்றைய கால கட்டத்தில் ரமலான் நோன்பு காலங்களில் மொஹல்லா தோறும் சகர் கமிட்டி என்று ஒன்று இருக்கும். முஸ்லிம் திருமணங்களில் மாப்பிளை ஊர்வலத்திற்கு பாடல்கள் பாடி வரும் அதே பைத் சங்கம்தான் ரமளான் மாதத்தில் சகர் கமிட்டியாகிவிடும்.  நள்ளிரவில் வந்து இஸ்லாமியப் பாடல்களைப் பாடி நோன்பு நோற்பதற்காக வேண்டி துயில் எழுப்புவார்கள்.   ”இப்பொழுது நேரம் சரியாக இரண்டு மணி நாற்பது நிமிஷம். சகர் செய்ய எழுவீர்......சகர் செய்ய எழுவீர்....” என்று மைக்கில் சொல்லிக் கொண்டும் பாடல்களைப் பாடிக்கொண்டும் வீதி வீதியாக அதிகாலை வரை இவர்களின் இந்த சேவை நீடிக்கும். நோன்பு மாதம் முழுக்க  29 அல்லது 30 இரவுகள் இளைஞர்கள் தூக்கம் விழித்து இந்த சேவை செய்வார்கள்.
 
 
இவர்களுக்கு இணையாக ஃபக்கீர்ஷாக்கள்  தப் அடித்துக்கொண்டு இஸ்லாமியப் பாடல்களைப் பாடியவாறு தனித்தனியாக வீதி வலம் வருவார்கள். இவர்கள் குழுவாக வருவதில்லை. ஒவ்வொரு மொஹல்லாவுக்கும் ஒருவர் என்ற கணக்கில், மக்களின் அந்த நள்ளிரவு ஆழ் நிலை உறக்கப் பொழுதில் தப்ஸ் அடித்து..’அஸ்ஸலாத்துல் ஹைருல் மினன்னவ்..’ ( தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்கிற சொல்லைப் போன்ற தேர்ந்த இசையை மொஹல்லாதோறும்   தெளித்துவிட்டுச் செல்வார்கள். ரமலானின் போது சஹருக்கு வந்து துயில் எழுப்புவது அவர்களின் பிரதான பணியாக இருக்கும். இருபத்தியெட்டாவது நாள் நோன்பன்று இந்த ஃபக்கீர்ஷாமார்கள் வீடு வீடாக வந்து காசு  வசூல் செய்வார்கள். இவர்கள் சுதந்திரப்போராட்டக்  காலத்தில் மிக முக்கியமான போர்ப்பணிகள் ஆற்றியவர்கள் என்கிற ஒரு வரலாறு உண்டு.   இப்போது அந்த பக்கீர்ஷாக்களை காண்பதே அரிதாகிவிட்டது!
 
சகர் கமிட்டிக்காரர்கள் ரமலானின் புனித லைலத்துல் கதிர் என்கிற இருபத்தி ஏழாம் இரவில் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வருவார்கள். வெளிப் பக்கம் இருந்தெல்லாம் விடிய விடிய அலங்கரிக்கப்பட்ட பல வகையான வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். நகர் முழுக்க இந்த அலங்கரிக்கப்பட்ட வாகன உலா செல்லும். மக்கள் சந்தோஷமும் , குதூகலமுமாக வந்து நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள். அவர்களுக்கு இணையாக சிறுவர்கள் எல்லாம் சைக்கிள் சக்கரத்தில் பாலுனைக் கட்டிக்கொண்டு படபடவென சத்தத்துடன் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் வீதி வீதியாக சுற்றி வருவார்கள்.
 
 
27 வது இரவு புனித லைலத்துல் கத்ர் அன்று இஷா தொழுகை பத்து மணிக்கு மேல்தான் ஆரம்பமாகும். அதன் பிறகு 20 ரகாஅத் தராவீஹ் தொழுகை. அதன் பிறகு சிறப்பு பயான் நடக்கும். நள்ளிரவு வரைக்கும் அன்றைய அமல்கள் நீடிக்கும். இதன் பிறகுதான் சகர் கமிட்டிகளின் வாகன உலாவும் ஆரம்பிக்கும். 26 வது நோன்பு அன்று மாலையிலிருந்து இந்த உற்சாகம் ஆரம்பித்துவிடும். விடிய விடிய மொஹல்லாக்கள் தோறும் திருவிழா பட்டபாடாக இருக்கும். அது ஒரு சந்தோஷமான காலம். இப்போது போல  நோன்பும், மூன்று ரம்ஜான் என்று இவ்வளவு குழப்பங்களுடன் இருந்ததில்லை. இலங்கை வானொலியில் தக்பீர் பைத்து (இறை நாமம்) ஓதினால் இங்கும் பெருநாள் கொண்டாடுவார்கள். நாடு முழுக்க ஒரே நாள் ரம்ஜான் பெருநாளாக இருக்கும். ஆனால் இன்று..!!!
 
 
இன்று எதுவுமே இல்லாமல்  எல்லாவற்றையும் மாற்றிவிட்டது காலம்! ஆனாலும், ஆண்டு தோறும் வரும் அந்த சிறு வயது இனிய ரமலானின் நினைவுகள் அது ஒரு நிலாக் காலம் என்று சொலுவதற்கு ஒப்ப இன்னமும் மனதினுள் அப்படியே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.
 
அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...