???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து! 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடக ஆளுநரின் முடிவுக்கு எதிராக ராம்ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Posted : வியாழக்கிழமை,   மே   17 , 2018  07:38:21 IST

கர்நாடக ஆளுநர் அரசியலமைப்பு அதிகாரத்தை  தவறாகப் பயன்படுத்துவதாக கூறி  மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கர்நாடகாவில் சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எந்தக்கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களைப் பெறவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம்  குமாரசாமி மனு அளித்திருந்தார். பெரும்பான்மை இல்லாத போதும் தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இன்று காலை பெங்களூருவில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் “கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா, பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பதன் மூலம் அரசியலமைப்புச்சட்டம் அவருக்கு வழங்கியுள்ள ஒட்டுமொத்த அரசியல் அதிகாரத்தையும், தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். அவரின் பதவிக்கும், அவர் சார்ந்திருக்கும் அலுவலகத்துக்கும் அவமரியாதையைத் தேடிக் தந்துள்ளார்” என தெரிவித்திருக்கிறார். மேலும் தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ இந்த மனுவைத் தாக்கல் செய்யவில்லை எனவும் ஆளுநர் எடுத்த முடிவு அரசியலமைப்பு சட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால் இதைத் தாக்கல் செய்ததாகவும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...