???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தூர்தர்ஷன் ராமாயணம், சன் டிவி மெட்டி ஒலி: பார்வையாளர்களை அள்ளுகின்றன!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   13 , 2020  07:11:25 IST


Andhimazhai Image
ராமாயணம், மகாபாரதம் போன்ற பழைய சீரியல்களை தூர்தர்ஷன் மீண்டும் ஒளிபரப்பி வருகிறது. இதை யடுத்து இந்தி மொழி பேசும் பிராந்தியங்களில் அதிகம் பார்க்கப்படும் சானல் என்ற அந்தஸ்த்தை தூர் தர்ஷன் மீண்டும் பெற்றுள்ளது.
 
ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியான BARC- Nielsen கருத்துக் கணிப்பு  இத்தகவலை வெளியிட்டுள்ளது. 1.2மில்லியன் என்று இருந்த பார்வை எண்ணிக்கை, 545 மில்லியன் என்ற அளவுக்கு ராமாயணம் சீரியலுக்கு அதிகரித்துள்ளது. ராமாயணம் ஒளிபரப்பாகும் நேரத்தில் இந்திமொழி பிராந்தியத்தில் வேறு சானல்களை மக்கள் பார்ப்பதே இல்லையாம்!
 
மகாபாரதத்துக்கும் ஆரம்பத்தில் 0.4 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்த பார்வை எண்ணிக்கை 145 மில்லியன் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
 
மேற்சொன்ன மதவாத சீரியல்கள் மட்டுமல்லாமல் சக்திமான், புனியாத், ஷ்ரிமான் ஷ்ரிமதி போன்ற  பழைய சீரியல்களும் விரிவாகப் பார்க்கப்படுகின்றன.
தூர்தர்ஷன் முப்பது ஆண்டுகளுக்கு முன் உள்ள சீரியல்களைப் போட்டு இந்த கொரோனா காலத்தில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
 
 
தெற்கே சன் டிவியும் இதோ போன்ற ஆச்சரியத்தை நிகழ்த்தி உள்ளது. 2002 -ல் வெளியான மெட்டி ஒலி, மீண்டும் ஒளிபரப்பாகி பார்வையாளர்களை அதிகம் ஈர்த்துள்ளது. 2009-ல் ஒளிபரப்பான தங்கம், இப்போது மீள் ஒளிபரப்பில் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்துள்ளது.
இதெல்லாம் கொரொனோ ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்கள் வேறு வழியின்றி பார்ப்பதாலா அல்லது நிஜமாகவே இந்த சீரியல்கள் கவர்கின்றனவா என்று தெரியவில்லை.
செய்தி சானல்கள், பிற சானல்களில் டாக் ஷோக்கள் வெற்றி பெற்ற காலம் போய் இப்போது மீண்டும் சீரியல் காலமோ?


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...