???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன்? ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி 0 தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் 0 பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் 0 ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் 0 கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராமானுஜன் - திரைப்பட விமர்சனம்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   17 , 2014  04:03:45 IST

”எனக்கு விடுதலை வேண்டும். இப்படி சோத்துக்காக அலையறத விட்டுட்டு என் கணித ஆராய்ச்சியில் மட்டும் ஈடுபடறதுக்காக…” என ராமானுஜம் நெல்லூர் கலெக்டர் ராமச்சந்திர ராவிடம் சொல்கிற காட்சி கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கையையும் மேதைமையையும் நன்கறிந்த அனைவரின் கண்களையும் குளமாக்கிவிடக்கூடியது. இது போல நெகிழ்வான தருணங்கள் நிறைந்த வாழ்க்கை ராமானுஜனுடையது.

 

 நாளைய கணிதத்தை நேற்றே கண்ட இந்த மேதையின் வாழ்க்கை சரிதத்தை ஞானராஜசேகரன் படமாக்க துணிந்ததற்கே அவருக்கு பாராட்டைத் தெரிவிக்கவேண்டும். திரைமொழியில் தெரியும் சிலபோதாமைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அந்த இடைவெளிகளையெல்லாம் இட்டு நிரப்பிவிடுகிறது ரமேஷ் வினாயகத்தின் இசை.

 

கொழுக் மொழுக்கென்ற சின்னகுழந்தையாக பள்ளி ஆசிரியரிடம் பூஜ்யத்தின் மதிப்பைப் பற்றிக் கேட்பதில் ஆரம்பித்து நாமகிரிப்பேட்டை அம்மன் வந்து தன் நாவில் கணிதப்புதிர்களை எழுதுவதாக நம்புவதில் இருந்து திருமணமாகி சென்னைக்கு வந்து வேலைதேடி அலையும் மேதையாக ராமானுஜனின் பாத்திரம் நன்றாக செதுக்கப்பட்டிருக்கிறது.

 

ஆச்சாரமான குடும்பப்பின்னணி, வறுமை இவ்விரண்டும் சேர்ந்து ஓர் உலகமகா மேதையின் பிரகாசத்தை ஒளித்துவைக்க முயன்று தோற்கின்றன. லண்டனில் இருந்து பேராசிரியர் ஹார்டி, இந்த வைரத்தின் ஜொலிப்பைக் கண்டுபிடிக்கிறார். கேம்ப்ரிட்ஜில் சைவமே சாப்பிட்டு விடிகாலையில் பூஜை செய்து பூக்களோடு பேசி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, காசநோயால் அவதிப்பட்டு, எப் ஆர் எஸ் ஆகி பெரும் புகழோடும் நோயோடும் இந்தியா திரும்பும் ராமானுஜம் மரணப்படுக்கையிலிருக்கும் போது கண்டுபிடித்த ஒரு தியரத்துக்கு 2012-ல்தான் நீருபணம் கண்டுபிடித்தார்கள் என்று முடிகிறது படம்.

 

ராமானுஜத்தின் தாயாராக அந்த காலகட்டத்தின் மாமியாராக சுகாசினி வாழ்ந்திருக்கிறார். அவரது இளம் மனைவி ஜானகியாக வரும் பாமா மிக அருமையான, அழகான நடிப்பால் கவர்கிறார்.

 

1887-ல் பிறந்து 1920-ல் இறந்துபோய்விடுகிறார் ராமானுஜன். அந்த காலகட்டத்தை அப்படியே திரையில் கொண்டு காட்டுவதில் அக்கிரஹாரத்து சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துவதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். துளித்துளியாய் என்ற அழகான பாடல் இசையமைப்பாளரை படம் முடிந்தும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. விண் கடந்த ஜோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்.. திருமழிசை ஆழ்வார் பாடல் சிலிர்ப்பூட்டுகிறது.

 

ராமானுஜன் என்கிற மிகப்பெரிய மேதையைப் பற்றி தமிழ்ச்சமூகம் திரும்பத் திரும்பபேசிக் கொண்டாடிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் அவரைப் பற்றி அந்த அளவுக்குப் பதிவுகள் இல்லவே இல்லை. இந்நிலையில் இந்த படம் மிக முக்கியமானதாகிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...