???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழர்களும் தமிழகமும் எனக்கு மிகவும் பிடிக்கும்:தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி உருக்கம்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  22:03:47 IST

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு அவரை பணியிட மாறுதல் செய்ய உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து, ராஜினாமா முடிவை எடுத்த அவர், தமிழகமும், தமிழர்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

நேற்றுமுன்தினம் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி, ‘இந்த நீதித்துறையை விட்டு நான் செல்கிறேன். என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இந்திய ஜனாதிபதிக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன். இதுநாள் வரை நேர்மையாகவும், மனசாட்சியுடனும் பணியாற்றியுள்ளேன். தற்போது நடக்கும் இந்த சம்பவங்கள் (மேகாலயாவுக்கு மாற்றம்) என் மனதை கடுமையாக பாதித்து விட்டது.

மேலும், தமிழ்நாடும், தமிழக மக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் (தமிழக நீதிபதிகள்) உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு என்னை ஒரு சகோதரியாக நினைத்து அழைக்க வேண்டும். நானும் கண்டிப்பாக உங்கள் வீடு தேடி வருவேன்’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...