???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'சரியான கேள்விதான் ஆனால் பதில் தான் இல்லை' - ராமதாஸ்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   21 , 2020  02:02:04 IST

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் பேரறிவாளன் விடுதலை செய்யப்படாதது ஏன் என உச்ச நீதிமன்றம் எழுப்பியிருப்பது சரியான கேள்வி தான் ஆனால், பதில் தான் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து கூறியுள்ள அவர், "அமைச்சரவைத் தீர்மானத்திற்குப் பிறகு பேரறிவாளன் விடுதலை செய்யப்படாதது ஏன்? அதற்கு தடையாக இருப்பது யார்? என்று உச்சநீதிமன்றமே வினா எழுப்பியிருக்கிறது. சரியான கேள்வி தான். ஆனால், பதில் தான் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு தடையாக உள்ள அந்த சக்தி எது?
 
பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூறி விட்டது.... உச்சநீதிமன்றமும் கூறி விட்டது. ஆனாலும், விடுதலை  இன்னும்  கனவாகவே உள்ளது. கனவு எப்போது நனவாகுமோ, எப்போது நீதி கிடைக்குமோ?
 
பேரறிவாளனை  விடுதலை செய்வதில் தாமதம் ஏன்? என்பது குறித்து 2 வாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  அதற்குள்ளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...