???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்: ராமதாஸ் காட்டம்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   14 , 2018  06:48:13 IST

செயற்கை ஆயுளைக் கொண்டிருக்கும் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 136 சட்டப்பேரவை உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு முதலமைச்சருக்கு இல்லை. தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆளுநரிடம் மனு அளித்த நாளுக்கும், அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாளுக்கும் இடைப்பட்ட ஒரு மாதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசுக்கு ஆளுநர் ஆணையிட்டிருந்தால், அப்போதே இந்த அரசு கவிழ்ந்திருக்கும். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் ஆளுநர் செய்த தாமதம், அதன்பின்னர் உயர் நீதிமன்றத்தில் நான்கு மாதங்களில் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், தீர்ப்பளிப்பதற்காக செய்யப்பட்ட ஐந்து மாத தாமதம், இதன்பின்னர் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளவிருக்கும் காலம் என கால தாமதங்களின் புண்ணியத்தில்தான் தமிழக அரசு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. எந்த வகையில் பார்த்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்’’ இவ்வாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...