???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   21 , 2018  01:47:20 IST

முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது, மேலும் சிக்கலாக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ``இஸ்லாமியப் பெண்களின் திருமண உறவை பாதுகாப்பதற்காக முத்தலாக் முறையை தடை செய்யும்  அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தைப் பாதுகாக்க மத்திய அரசின் அவசரச் சட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது.
 
இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைக்கு எதிராக முத்தலாக் முறை அமைந்திருந்தது என்பதில் ஐயமில்லை. அதனால் தான் முத்தலாக் முறையை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கு ஏற்ற கருவி அல்ல. இது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானதாகவே அமையும்.
 
மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தின்படி முத்தலாக் கூறி இஸ்லாமியப் பெண்களுடனான திருமண உறவை முறித்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. இது பிணையில் வெளிவரக்கூடிய குற்றம் தான் என்றாலும் கூட, காவல் நிலையத்தில் பிணை பெற முடியாது; நடுவர் நீதிமன்றத்திற்கு சென்று தான் பிணை பெற முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.
 
இஸ்லாமியர்களிடையே தலாக் -இ- பாயின் என்ற மணமுறிவு முறை நடைமுறையில் உள்ளது. அது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் கூறவில்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தில் தலாக் -இ- பாயினும் தண்டனைக்குரிய குற்றமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது குடிமை ஒப்பந்தம் என்றும் அத்தகைய ஒப்பந்த மீறலுக்கு சிறை தண்டனை விதிப்பது முறையல்ல என்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கூறுகின்றனர்.
 
அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகளில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நாட்டிலும் முத்தலாக் என்பது தண்டனைக்குரியக் குற்றமாக அறிவிக்கப்படவில்லை.  அவ்வாறு இருக்கும் போது இந்தியாவில் மட்டும் அதை தண்டனைக்குரியக் குற்றமாக அறிவிப்பது ஏன்?
 
இஸ்லாமியரின் சமூக, கலாச்சார, பண்பாட்டு நடைமுறைகளை மதிக்கும் வகையில் தான் இந்தியாவில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது; இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியமும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் முத்தலாக் தடை தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளிடம் கலந்து பேசி ஒருமித்த கருத்தை உருவாக்கிய பிறகே எந்த ஒரு சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக மத்திய அரசு தன்னிச்சையாக பிறப்பித்துள்ள இந்த அவசரச் சட்டம் இஸ்லாமியப் பெண்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக நிலைமையை மேலும், மேலும் மோசமாக்கவே வகை செய்யும்.
 
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை இஸ்லாமியப் பெண்களின் திருமண உறவை முறிக்கப் பயன்படுத்தப்படும் முத்தலாக் முறை தடை செய்யப்பட வேண்டும்; அதேநேரத்தில் அது தண்டனைக்கு உரிய குற்றமாக இருக்கக்கூடாது. மாறாக கைவிடப்படும் இஸ்லாமிய பெண்களின் கண்ணியம், கவுரவம், வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் தான் இஸ்லாமியப் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் வகுக்கப்பட வேண்டும்.
 
அதற்கு வசதியாக இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டத்தை ரத்து செய்து விட்டு, இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்துடன் ஆலோசனை நடத்தி புதிய சட்ட முன்வரைவை உருவாக்கி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...