அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   15 , 2021  21:53:20 IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ. 5 லட்சம் நன்கொடையை அளித்துள்ளார்.
 
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி, உள்ளிட்ட குழுவினர் வருகை தந்தனர்.
 
மத பேதங்கள் இல்லாமல் அனைத்து தரப்பிலிருந்தும் நன்கொடை பெறும் வி.எச்.பி.யின் முயற்சியின் ஒரு பகுதி இது என்று இந்த அமைப்பின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். ராமர் கோயிலுக்காக நிதித் திரட்டும் பணி 5,25,000 கிராமங்களில் நடைபெறவுள்ளது. வசூல் செய்யப்படும் தொகை 48 மணி நேரத்துக்குள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று வி.எச்.பி கூறுகிறது. நன்கொடை வசூல் பணி பிப்ரவரி 27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வி.எச்.பி. சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறும்போது, “ராம்நாத் கோவிந்த் நாட்டின் முதல் குடிமகன் அதனால் அவர் மூலம் இந்த நன்கொடை வசூல் பணியை தொடங்குகிறோம். அவர் ரூ.501,000 தொகை நன்கொடை அளித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் வளாக ஒட்டுமொத்த கட்டுமான செலவு ரூ.1,100 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கோயிலுக்கு மட்டும் ரூ.300-400 கோடி செலவு செய்யப்படவுள்ளது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...