???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோலிவுட் பிரபலத்தை சீண்டும் ராம் கோபால் வர்மா!

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   09 , 2020  05:21:09 IST

இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ’ஆர்.ஜி.வி மிஸ்ஸிங்’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

படத்திலும் சரி, சொல்கின்ற கருத்திலும் சரி சர்ச்சைகளை கிளப்பி சர்ச்சை நாயகனாக வலம் வரும் ராம் கோபால் வர்மா, கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட சில ஆபாசமான சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி அதை ஓ.டி.டி இணையதளங்களில் வெளியிட்டிருந்தார்.  

இந்நிலையில் அவர் எழுதி நடிக்கும் ‘ஆர்.ஜி.வி மிஸ்ஸிங்’ என்ற படத்தின் போஸ்டர்களும் கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் புகைய ஆரம்பித்துள்ளன. ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என வரிசையாக நான்கு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

அந்த போஸ்டர்களில் தெலுங்கில் முன்னணி சினிமா நட்சத்திரங்களான பவண் கல்யாண், சிரஞ்சீவி குடும்பம் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் ஆகியோரின் சாயல் கொண்ட நடிகர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தற்போது, அந்த படத்தின் 5-வது போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அதில் ரஜினிகாந்தின் உருவத்தையொத்த ஒரு நடிகரின் படத்துடன் இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில், “ஆர்ஜிவி மிஸ்ஸிங் படத்தின் புதிய நடிகர் கஜினிகாந்த். வேறு யாராவது ஒருவரின் சாயல் தெரிந்தால் அது முற்றிலும் தற்செயலானது” என்று பதிவு செய்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.  

ராம் கோபால் வர்மா திரைக்கதை எழுதும் ‘ஆர்ஜிவி மிஸ்ஸிங்’ படத்தை  அதிர் வர்மா இயக்குகிறார். சாட்டர்ஜி தயாரிக்கிறார். இத்திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...