???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   19 , 2020  22:30:58 IST

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த வேளான் சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்டட மாநிலங்களில் விவசாயிகள் மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். பஞ்சாப் மக்களின் எதிர்ப்பு காரணமாக, ஷிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளார். அதனையடுத்து, வேளான் சட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ளன. விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் 2020, விலை நிர்ணயம் மீதான விவசாயிகள் ஒப்புதல் 2020, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 இந்த மூன்று சட்டங்களும் ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டன.
 
இந்தநிலையில், மாநிலங்களவையில் இந்த மூன்று சட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க முனைப்பு காட்டிவருகிறது. அதனால், ஞாயிற்று கிழமையான இன்று மாநிலங்களவை கூடுகிறது. பா.ஜ.க எம்.பிக்கள் அனைவரும் மாநிலங்களவைக்கு வரவேண்டும் என்று கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.
 
மக்களவையில் பா.ஜ.கவுக்கு தனிப்பெரும்பான்மை உள்ள நிலையில், மாநிலங்களவையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டிய அவசியம் உள்ளது. மொத்தமுள்ள 245 உறுபிப்பினர்கள் பா.ஜ.க 123 எம்.பிகளின் ஆதரவைப் பெறவேண்டிய அவசியம் உள்ளது.
 
அ.தி.மு.கவின் 9 எம்.பிக்கள், ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் 6 எம்.பிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெறுவோம் என்று பா.ஜ.கவினர் நம்பிக்கைத் தெரிவித்துவருகின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...