மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்
Posted : வெள்ளிக்கிழமை, மே 27 , 2022 17:56:47 IST
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மூன்று திமுக வேட்பாளர்கள் இன்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்தார். அதன்படி, திமுக வேட்பாளர்களான தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.சீனிவாசனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் இருந்தனர்.