???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஃபேல் விமானத்துக்கு பொட்டு, எலுமிச்சைப் பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங்!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   08 , 2019  22:20:05 IST

சரஸ்வதி பூஜை மற்றும் இந்திய விமானப் படை நிறுவப்பட்ட இன்றைய தினத்தில் ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஃபோர்டியக்ஸ் நகரில் ரஃபேல் விமானத்தைத் தயாரிக்கும் தசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடமிருந்து முதல் விமானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பரதாயப்படி பெற்றுக்கொண்டார்.

போர் விமானத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, விமானத்துக்கு சந்தனம், குங்குமம் இடப்பட்டது. விமானத்தின் மீது, ராஜ்நாத் சிங் குங்குமத்தால் இந்தியில் ஓம் என்று எழுதினார். விமானத்தின் நான்கு சங்கரங்களிலும் எலுமிச்சைப் பழம் வைக்கப்பட்டது. பின்னர், தேங்காய் பழத்துடன் இந்து முறைப்படி பூஜை செய்யப்பட்டது.

அதன்பிறகு பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்திய ராணுவத்துக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இந்தியா-பிரான்ஸுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் இது ஒரு மைல்கல். குறிப்பிட்ட காலநிர்ணயத்தை, தசால்ட் நிறுவனம் மிகச் சரியாக பின்பற்றியது அவர்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் விமானங்கள் நம்முடைய நாட்டுக்கு வலிமையை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார்.

தற்போது, சம்பிரதாய முறைப்படி ரஃபேல் விமானம் தற்போது வழங்கப்பட்டாலும், முதல் நான்கு விமானங்கள் 2020-ம் ஆண்டு மே மாதம் தான் இந்தியாவுக்கு வரும்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...