???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை 0 அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது: தமிழிசை 0 மாணவி ஃபாத்திமா மரண வழக்கு: கேரளத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை 0 திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பா.ரஞ்சித் 0 மாவட்ட ஆட்சியரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு! 0 காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு 0 நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு! 0 காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2019  23:17:00 IST

பாகிஸ்தான் அரசு, ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச அளவில் இந்திய மீது அழுத்தம் கொடுக்க முயன்று வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதில் ஜம்மூ காஷ்மீர் குறித்து பேசப்படாது. மாறாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேசப்படும்” என்று கூறியுள்ளார்.

ஹரியானாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் இப்படி பேசியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் மேலும் பேசிய ராஜ்நாத் சிங், “பாகிஸ்தான் அரசு, தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருவதை நிறுத்தினால்தான், பேச்சுவார்த்தை நடக்கும். முன்னதாக பாகிஸ்தான், சீனாவின் உதவியோடு ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. சட்டப் பிரிவு 370 குறித்து நடவடிக்கை எடுத்தால், அது தேசத்தை இரண்டாக்கும் என்று பலர் கருதினார்கள். அதில் கை வைத்தால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே வராது என்றும் கூறினார்கள். பாஜக-வுக்கு வாக்கு வங்கி அரசியலைப் பற்றித் துளியும் கவலை இல்லை. தேச ஒற்றுமையை முன்னிருத்தும் அரசியலைத்தான் நாங்கள் செய்வோம்” என்று உரையாற்றினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...