![]() |
ஆறு பேர் விடுதலை – முதலமைச்சர் ஆலோசனை!Posted : சனிக்கிழமை, மே 21 , 2022 18:13:04 IST
பேரறிவாளன் விடுதலை தொடர்ந்த மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பு மாநில அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி சிறையில் நீண்டகாலமாக இருக்கும் விசாரணை கைதிகளையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதில் தலைமை செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, எம்பி ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|