???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   04 , 2020  22:38:56 IST

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை கையாளும் இந்தியாவின் அணுகுமுறை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவ்வகையில், பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் உடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது, ராஜீவ் பஜாஜ், 'இந்தியா அமல்படுத்தி இருப்பது கடுமையான பொது முடக்கம். இதுபோன்ற பொது முடக்கத்தை நான் எங்குமே கேள்விப்பட்டது இல்லை. இது, பொருளாதாரத்தையே அழித்து விட்டது. இந்த முடக்கம், கொரோனா வளையத்தை தட்டை ஆக்குவதற்கு பதிலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளையத்தை தட்டை ஆக்கிவிட்டது. அதுதான் நாம் கண்ட பலன். இதிலிருந்து விடுபட நீண்ட காலம் பிடிக்கும். இந்த வைரஸ், தொற்றும் புற்றுநோய்க்கு சமமானது என்று பொதுமக்களிடையே பீதி ஊட்டப்பட்டது. ஆனால், இப்போது அவர்களின் மனதை மாற்றி, கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள்.

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வைரஸ் இன்னும் நீடிப்பதை தெளிவுபடுத்துகிறது. ஊரடங்கை நீக்கினால், கொரோனா நம்மை தாக்க காத்திருக்கிறது. எனவே, பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. கொரோனா வருவதற்கு முன்பே பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது. வேலையில்லா திண்டாட்டம் இருந்தது. இப்போது, கொரோனா பிரச்சினை, இரண்டையும் இன்னும் ஓரத்துக்கு தள்ளிவிட்டது.

தொழில்துறை மீண்டும் இயல்புநிலைக்கு வருவது சுமுகமாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. முதலில், மக்கள் மனதில் இருந்த பயத்தை அகற்ற வேண்டும். சரியோ, தவறோ பிரதமர் சொல்வதை மக்கள் கேட்பதுபோல் தோன்றுகிறது. எனவே, பிரதமர்தான் நாம் எப்படி முன்னேறி செல்ல போகிறோம் என்று ஒவ்வொருவரிடமும் சொல்ல வேண்டும்' என்றார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...