???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தள்ளிப்போகும் ரஜினிமுருகன்.

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   31 , 2014  23:46:56 IST

  சிவகார்த்திகேயன் இப்போது துரைசெந்தில் இயக்கும் டாணா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இரண்டுபாடல்களைப் படம்பிடிப்பதற்காக அந்தப்படக்குழு நார்வே சென்றுவிட்டது. பத்துநாட்களில் பாடல்களை முடித்துவிட்டு வந்தார்கள் என்றால் அதன்பின் சிவகார்த்திகேயனுக்கு அங்கு வேலை இல்லை. உடனே அடுத்த படமான ரஜினிமுருகனைத் தொடங்கிவிடலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அந்தப்படத்தைத் தயாரிக்கும் திருப்பதிபிரதர்ஸ் நிறுவனம் இப்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கெனவே வளர்ந்து கொண்டிருக்கும் படங்களை முடித்து வெளியிடுவதில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். அதன்படி உத்தமவில்லன், இடம்பொருள்ஏவல் ஆகிய படங்களின் வேலைகள் கெடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

 

அதற்கே பெரும் தொகை தேவைப்படுவதால் புதிதாக ரஜினிமுருகனைத் தொடங்கினால் தொடர இயலாது என்று கணக்குப் போட்டிருக்கிறார்களாம்., இதனால் அந்தப்படத்தின் கதை விவாதத்தைப் பல மாதங்களாக நடத்தி முடித்துவிட்டுப் படப்பிடிப்புக்காகக் காத்திருந்த இயக்குநர் பொன்ராமைக் கூப்பிட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் ஒரிரு மாதங்கள்கூட ஆகலாம். அதுவரை யாராவது கேட்டால், இன்னும் கதைவிவாதம் முடியவில்லை என்று சொல்லுங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார்களாம். அதோடு அதுவரை சிவகார்த்திகேயன் காத்திருக்கவேண்டுமே என்கிற கவலை இயக்குநருக்கு வந்துவிட்டதாம். அதை தயாரிப்பாளரிடம் பொன்ராம் சொல்லியிருக்கிறார். இதனால் மலேசியா போயிருக்கும் லிங்குசாமி வருவதற்கும், நார்வே போய்விட்டு சிவகார்த்திகேயன் வருவதற்கும் சரியாக இருக்கும். அதன்பின் லிங்குசாமி சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேசி காத்திருக்கவைக்கலாம் என்று திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...