???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு 0 சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ! 0 கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! 0 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு: அமைச்சர் எச்சரிக்கை 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! 0 முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்! 0 யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! 0 பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்: கி.வீரமணி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஜினிமுருகன் மே1ரிலீஸ் என்றுஇப்போதே அறிவித்ததுஏன்?

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   06 , 2015  01:11:47 IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் காக்கிச்சட்டை படம் தயாராக இருக்கிறது. அந்தப்படம் பொங்கலன்று வெளியாகும் என்று சில நாட்கள் விளம்பரம் வந்தது. அதன்பின் அது நின்றுவிட்டது. அனேகமாக பிப்ரவரி மாதம் இரண்டாவதுவாரம் அந்தப்படம் வெளியாகலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப்படத்தைத் தயாரித்த நிறுவனமோ அல்லது வெளியிடும் நிறுவனமோ இன்னும் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் இப்போது படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிமுருகன் படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கதாநாயகனின் தயாராக இருக்கும் படத்தைப் பற்றிச் சொல்லாமல் அவருடைய அடுத்தபடத் தேதி அறிவிக்கப்பட்டது எதனால்? என்று பலரும் வியந்துகொண்டிருக்கின்றனர். அதற்குக் காரணம் என்னவென்று விசாரித்தால், அண்மைக்காலமாக பெரியநடிகர்களின் படம் வெளியாகிற நேரங்களில் எல்லாம் எதாவதொரு சிக்கல் வருகிறது. அது மட்டுமின்றி ஒரு வெளியீட்டுத் தேதியில்  ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை வெளியிடத் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகிவிடுகின்றன. இவற்றிற்கு, தயாரிப்பாளர்கள் தங்களுடைய படம் எப்போது வெளியாகும் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்து வைப்பதே முக்கியக்காரணம் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பெரியபடமும் வெளியீட்டுத் தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டால் மற்ற நிறுவனங்கள் அதற்கேற்ப தங்களுடைய படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கலாம். இதனால் பல சங்கடங்கள் தவிர்க்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கான தோடக்கமாகத்தான் இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதி நான்குமாதங்கள் முன்னமே அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். முதலிலேயே துண்டுபோட்டு இடத்தைப் பிடித்துக்கொள்வது என்றே சொல்வதாக இருந்தாலும் அண்மைக்காலச் சிக்கல்களைத் தவிர்க்க இது நல்லவழியாக இருக்கிறது என்றே பலரும் நினைக்கிறார்கள்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...