???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்!- மருத்துவர் இராமதாசு 0 கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் 0 கிரீமிலேயர் முறையை முற்றாகக் கைவிடுக!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 0 தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா? -முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி 0 எட்டு போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம்: உ.பி, ரவுடி விகாஸ் துபே கைது! 0 சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் 0 ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்! 0 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 0 தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   14 , 2020  21:04:30 IST

துக்ளக் பத்திரிக்கையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த துக்ளக் வாசகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வீடியோ வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து சோ ராமசாமியை புகழ்ந்து பேசினார்.

இதையடுத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் பங்கேற்கின்றனர். முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்.

இப்போது நியூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள். பொய்யை உண்மையாக்காதீர்கள். சோ ராமசாமி ஜனங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். தற்போதைய காலத்தில் சோ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை. பத்திரிகைகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.சோ என்றால் துக்ளக். துக்ளக் என்றால் சோ. துக்ளக் பத்திரிக்கையை குருமூர்த்தி ஒரிஜினாலிட்டியுடன் நடத்திவருகிறார். சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ் என்பது படித்து வருவதல்ல பிறந்து வருவது’ என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...