???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’’போடா.. இந்த படத்துல உனக்கு ரோல் இல்ல…’’ ரஜினியை விரட்டிய தயாரிப்பாளர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   10 , 2019  02:09:47 IST


Andhimazhai Image

அவ்வப்போது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை ரஜினிகாந்த் திரும்பிப் பார்ப்பது வழக்கம். தர்பார் பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் இப்படித் திரும்பிப் பார்த்துப் பேசியிருக்கிறார். இந்த சம்பவம் 1977-ல் நடந்திருக்கிறது.

 

”பாரதிராஜாவின் 16 வயதினிலே வெளியான ஒரு வாரத்திற்கு பின்பு ஒரு  தயாரிப்பாளர் என்னை சந்தித்தார். நல்ல கதாபாத்திரம் இருக்கிறது என்றும் அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். அந்த படத்தில் வேறொரு நடிகர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

 

 அவரிடம் சம்பளத்தை பற்றி பேசினேன். பத்தாயிரம் ரூபாயில் தொடங்கிய பேரம் ஆறாயிரம் ரூபாயில் முடிந்தது. சினிமாவில் முன்பணமாக ரூ 100 அல்லது ரூ 200 தருவது வழக்கமாக நடைபெறும் ஒன்று . ஆனால் நான் ஆயிரம் ரூபாய் கேட்டேன். தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றும் புரொடக்‌ஷன் மேனேஜர் நாளை வந்ததும் அவர் தருவார் என்றார். ஆனால் மறுநாள் அவர் வந்தபோது அவருக்கோ எனக்கு பணம் தரவேண்டும் என்பதே தெரியவில்லை. வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள தொலைபேசி மூலமாக தயாரிப்பாளருக்கு பேசினேன். அவர் நாளை படப்பிடிப்புக்காக மேக் ஆப் போடுவதற்கு முன்பே முன்பணம் கைக்கு வந்துவிடும் என்றார்.

 

ஏவிஎம் ஸ்டூடியோவில் ஷூட்டிங். கதாநாயகன் வந்துவிட்டார். நீங்க மேக் அப் போட்டுக்கோங்க என்று சொன்னார் புரொடக்‌ஷன் மேனேஜர் ஆனால் அட்வான்ஸ் பணம் வரலை.. நான் மேக் அப் போட்டுக்கொள்ள மறுத்துவிட்டேன். படபிடிப்பு தாமதமானது. அப்போது ஏவிஎம் ஸ்டுடியோவுக்குள் வேகமாக வெள்ளை அம்பாசிடர் கார் ஒன்று வந்தது. அதிலிருந்து இறங்கிய தயாரிப்பாளர் என்கிட்ட வந்து, ‘என்னடா.. நீ என்ன பெரிய ஆர்டிஸ்டா? ஹீரோவா நீ? உன்னை மாதிரி எத்தனை பேர பாத்திருக்கேன். ஏதோ ரெண்டு மூணு படம் பண்ணிட்ட... அட்வான்ஸ் வாங்காம மேக்கப் போட மாட்டீயா. உனக்கு காரெக்டர் கிடையாது...போடா..!’’ என்றார். வீட்டுக்கு கார்ல கொண்டுபோய் விட்டுடுங்க என்று கேட்டேன். மறுத்துவிட்டார். கையில் காசேயில்லை அப்படியே ஏவிஎம் ஸ்டூடியோவை விட்டு நடந்து வெளியே வந்தேன்.

 

அப்போ ஆச்சரியமான விஷயம் நடந்தது. வெளியே மக்கள் ‘ என்னை பார்த்து ஏய் பறட்ட. இது எப்படி இருக்கு’ என்று ஆரவாரம் செய்தனர். பதினாறு வயதிலே படத்தில் நான் பேசிய வசனம்… அதச்சொல்லி கத்துறாங்க... என்னப் பாத்து கிண்டல் பண்றாங்களான்னுகூட நினச்சேன்… ஆற்காடு ரோடெல்லாம் இந்த வசனத்தைப் போட்டு பட போஸ்டர் ஒட்டி இருக்காங்க..

 

அப்போது ஒரு முடிவு எடுத்தேன். இதே ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு ஃபாரின் காரில்... கால் மேல் கால் போட்டு வரணும். அப்படி செய்யாவிட்டால் நான் ரஜினிகாந்த் இல்லை என்று சொல்லிக்கொண்டேன். இரண்டரை வருடம் கழித்து நாலே கால் லட்சத்திற்கு ஃபியேட் கார் வாங்கினேன். ஏவிஎம் ஸ்டூடியோ முதலாளியோட கார் அது!

 

அந்த குறுகிய காலத்தில் எனக்குக் கிடைச்ச வெற்றிக்கு கடின உழைப்பு மட்டும்தான் காரணம் என்று சொன்னால் அது தப்பு. சரியான நேரம், சூழ்நிலை, என் மேல் நம்பிக்கை வச்ச மனுஷங்க..அதுதான் காரணம்.. இன்னிக்கும் அது பொருந்தும்… புத்திசாலித்தனம் அறிவு உழைப்பு மட்டும் போதாது.. அது வெறும் 10 சதவிகிதம்தான் வெற்றிக்கு வழிவகுக்கும். எல்லாத்துக்கும் நேரம், இடம், சூழ்நிலை… பெரியவங்க ஆசிர்வாதம், மக்களுடைய ஆதரவு தேவை.. என்றார் அவர்.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...