???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   07 , 2019  23:02:28 IST

தர்பார் பட பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழக மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் அனிருத், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், தர்பார் படத்தில் சந்திரமுகியைவிட கிளாமராக நயன்தாரா நடித்திருப்பதாகவும், இளையராஜாவுக்கு இருப்பதை போன்ற கதை அறிவு எந்த இசையமைப்பாளருக்கும் இருக்காது என்றும் கூறினார். தமிழக அரசு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், இந்த அரங்கில் இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதியளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

இயக்குநர் பாலசந்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் தன் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்று கூறிய ரஜினிகாந்த், அதைபோல தமிழக மக்களும், ரசிகர்களும் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது என்றார். கடும் உழைப்பு, திறமை, சாணக்கியத்தனம் மற்றும் சுற்றியிருக்கும் மனிதர்களை பொறுத்துதான் வெற்றி அமையும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...