???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் 0 உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: முதலமைச்சர் 0 தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது 0 இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும்: டெல்லி வன்முறை பற்றி ரஜினி 0 சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான் 0 ’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் 0 வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு! 0 சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது! 0 ஆர்.எஸ்.பாரதி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், ஜெயலலிதா -எல்லோரும் நல்லவரே... ரஜினி அரசியலுக்கு என்ன அர்த்தம்?

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   06 , 2018  00:16:02 IST

 
 
கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்னபிறகு ரஜினி தோன்றும் முதல் சென்னை நிகழ்ச்சி என்பதால் அதற்கு எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினியும்  அதற்கு குறை வைக்காமல் பேசித்தள்ளிவிட்டார். அவர் பேச்சில் இருந்து  என்ன புரிந்துகொள்ள முடிகிறது என்று அலசியதில் முக்கியமாகப்   படுவது அவர் தன் முந்தைய அரசியல் தலைவர்கள் யாரையும் குறைசொல்லாமல் அவர்களின் நல்ல பண்புகளை எடுத்துக்கொண்டு அரசியல் செய்யவேண்டும் என்று நினைக்கிறார் என்பது.
 
அதனால் தான் அவர் எம்ஜிஆர் ஆட்சியை நடத்துவேன் கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் திறமையான ஆட்சி என்றெல்லாம் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எம்ஜிஆர் ஆட்சியை நடத்துவேன் என்றுதான் ஜெயலலிதாவும் சொன்னார், மற்ற சிலரும் சொன்னார்கள். இப்போது ரஜினியும் சொல்கிறார். ஆனால் இப்போது வாக்களிக்க இருக்கும் பெரும்பாலோருக்கு அதாவது 20-40 வயதில் இருப்பவர்களுக்கு எம்ஜிஆர் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரியவே தெரியாது.
 
ஆனால் ஒன்று மட்டும் தெரியும். இதுவரைக்கும் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் ஆட்சி எதுவும் நடக்கவில்லை என்பதுதான் அது. ரஜினி தான் என்ன மாதிரி ஆட்சி நடத்தப்போகிறேன் என்பதை விளக்கமாக முன்வைப்பது நல்லது. இம்மாதிரி மேடைகளில் தமிழ்நாட்டின் பிரச்னை என்ன என்று அவர் விவரமாகச் சொல்லப் பயன்படுத்தவேண்டும். அதுதான் அவரது ரசிகர்களை அரசியல் மயப்படுத்தும். அதைவிட்டுவிட்டு ரசிகர் மன்ற உறுப்பினர்களாகவே அவர்களை வைத்திருக்க அவர் நினைக்கவேண்டியது இல்லை! அவர்களும் அரசியல் பேசவேண்டும். அதற்கு அவரது தலைவர் முதலில் விவரமாக தமிழக அரசின் சிஸ்டம் கெட்டு விட்டது என்றால் என்னென்ன நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று பட்டியலிட வேண்டும். அப்போதுதான் வெற்றிடம் வெற்றிடம் என்று இவர் கூவுவதை இவரால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை உருவாக்க முடியும்.
 
 
தமிழ்நாட்டில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது இருக்கிறது என்றால் மு.க.ஸ்டாலின் என்று ஒருவர் திமுகவின் செயல்தலைவராக இருக்கிறாரே அவர் நல்ல தலைமைக்குப் பொருத்தமானவர் இல்லை என்றுதான் சொல்கிறார். அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், டிடிவி தினகரன் ஆகியோரும் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் நல்ல தலைவர்கள் இல்லை என்றுதானே சொல்கிறார்? அதை வெளிப்படையாக வார்த்தைகளில் சொல்ல என்ன தயக்கம்?
 
 
கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்வதற்கு முன்பே ’கொளுகை’ என்ன என்று கேட்கலாமா? என்று ரஜினி கேட்கிறார். எம்ஜிஆர், கருணாநிதி,சோ போன்றவர்களிடம் அரசியல் பழகினேன் என்று சொல்கிற ஒருவருக்கு தான் கட்சி தொடங்கினால் அதற்கு இன்னமாதிரி ’கொளுகை’ இருக்கும் என்று ஒரு அவுட்லைன் கூடவா சொல்லத் தெரிந்திருக்காது? அதை ஒரு நிருபர் கேட்பதில் என்னதான் தவறு இருக்கமுடியும்?
 
 
இப்போது ஆன்மிக அரசியல் என்கிற ஒரு விஷயத்தை ரஜினி முன்வைத்துள்ளார். அதையே இப்போதைக்கு அவரது ’கொளுகை’ என்று வைத்துக்கொள்வோம். இறை நம்பிக்கை இருப்பது தான் ஆன்மிக அரசியல் என்று சொல்கிறார் அவர். இறைநம்பிக்கை இல்லாத கட்சி தமிழ்நாட்டில் எது? ஓரளவுக்கு இடதுசாரிகளை விடுத்தால் மீதி எந்த கட்சிக்கும் நாத்திகம் கொள்கையாகக் கிடையாது. திமுக கடவுள் மறுப்பை குப்பையில் போட்டு அறுபது ஆண்டுகள் ஆகிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா சொல்லிவிட்டுப்போய்விட்டார். மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதுதான் அந்த கட்சி, மற்றும் அதைச்சார்ந்த கட்சிகளின் கொள்கையாக இருக்கிறது. இதைத்தான் இறைநம்பிக்கையுடன் முடிச்சு போடுகிறாரா ரஜினி? மூகாம்பிகையாலும் மதுரைவீரனாலும் இயக்கப்பட்டவர் எம்ஜிஆர் என்று சொல்கிறார் ரஜினி. இதன்மூலம் ரஜினியின் அரசியலை இதுபோன்ற தெய்வங்கள்தான் இயக்கவிருக்கின்றன என்பதை அவர் கூறுகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். வெளியே சொல்லாமல் ரகசியமாக தெய்வ நம்பிக்கையுடன் இருப்பதற்கு ரஜினிபோல் வெளிப்படையாக இருப்பதே மிக நல்லவிஷயம். அதற்காக அவரைப் பாராட்டலாம். ஆனால் மதச்சார்பற்ற கொள்கைகளைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதையும் வெளிப்படையாகக் கூறிவிடுவது நலம் பயக்கும்.
 
 
ரஜினி சார் எளிய தெளிவான மொழியில் மேடையில் பேசுகிறார். அது பெருமளவு மக்களுக்குப் பிடிக்கும். ஆனால் அவர் தன் அரசியலைப் பற்றி, தான் செய்ய விரும்பும் மாற்றங்கள் பற்றி அந்த உரையில் குறிப்பிடுவது நல்லது. சினிமா விழாவில்தான் எல்லோரையும் பாராட்டுவார்கள். அரசியல் நிகழ்வுகளில் இதற்கு இடம் இல்லை!
 
 
-அஜீத்ராம்
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...