மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரசிகைக்கு வீடியோ காலில் ஆறுதல் கூறிய ரஜினி!
Posted : சனிக்கிழமை, டிசம்பர் 18 , 2021 10:51:03 IST
உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரசிகை ஒருவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ மூலம் ஆறுதல் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகைகளில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவலை அறிந்த ரஜினிகாந்த் அந்தப் பெண்ணுக்கு வீடியோகால் மூலம் பேசினார். “ஒன்றும் பயப்பட வேண்டாம். ஆண்டவன் இருக்கிறான். கண்டிப்பாக நீங்கள் குணமடைந்து வீடு திரும்புவீர்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக தன்னால் நேரில் வந்து பார்க்க முடியவில்லை. நீங்கள் நலம் பெற நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுடைய சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது.” என அப்பெண்ணுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வரும் ரசிகைக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.