???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி! 0 ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு! 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   05 , 2018  21:32:52 IST

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நாளை (டிசம்பர் 7) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. ராஜஸ்தானில் பிரதமர் மோடியும், தெலங்கானாவில் ராகுல் காந்தியும் கடைசிக்கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
 
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசாகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சியை, வீழ்த்த தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக காங்கிரசுடன், தெலுங்கு தேசம் கூட்டணி வைத்துள்ளது. மறுபுறம் டிஆர்எஸ் கட்சி, ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இங்கு முஸ்லிம்களின் வாக்கு வங்கி அதிகம் என்பதால் அது டிஆர்எஸ் கட்சிக்கு சாதகமாக அமையக்கூடும்.
 
தெலங்கானாவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், ராகுல் காந்தி இரு தினங்களுக்கு மேலாக பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று ராகுல் காந்தியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
 
ராஜஸ்தானை பொறுத்தவரை ஆளும் பாஜக-வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு முதல்வர் வேட்பாளரையே அறிவிக்காமல் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
 
ஆண்ட கட்சி தேர்தலில் மீண்டும் வென்றதில்லை என்ற வரலாறு இங்கு இருப்பதால், பாஜக-விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் மோடி, அமித் ஷா ஆகியோரின் பிரசாரம் தங்களை காப்பாற்றும் என பாஜகவினர் நம்புகின்றனர்.
 
பிரசாரத்தில் பேசிய மோடி, ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என காங்கிரஸ் உணர்ந்துவிட்டதால் சாதிய அரசியலை கையில் எடுத்திருப்பதாகவும், சாதாரண டீ வியாபாரியான தன்னால் நான்கு தலைமுறை ஆண்டவர்கள் செய்த ஊழலை வெளிக் கொண்டுவர முடிந்ததாகவும் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...