???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   14 , 2018  23:10:31 IST

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தள் 1 தொகுதியில் வெற்றிபெற்றது. அதனையடுத்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் அளவிற்கான பெரும்பான்மை கிடைத்தது. அதனையடுத்து, யார் முதல்வராக தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி காங்கிரஸ் தலைமைக்கு எழுந்தது.
 
இளம் தலைவராக வளர்ந்திருக்கும் சச்சின் பைலட்டுக்கும், மூத்தத் தலைவர் அசோக் கெஹ்லாட்டுக்கு இடையில் பலத்தப் போட்டி நிலவுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவிரமாகக் களப்பணி செய்து இளம் தொண்டர்கள் மத்தியில் சச்சின் பைலைட் செல்வாக்கைப் பெற்றுள்ளார். அதேநேரத்தில் ஏற்கெனவே இருமுறை ராஜஸ்தான் முதல்வராக இருந்த அசோக் கெஹ்லாட் நீண்ட காலமாக முக்கியத் தலைவராக வலம் வருகிறார். இருவரில் யாரை முதல்வராகத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது.
 
அந்தக் குழப்பத்துக்கு முடிவு கொண்டுவரும் வகையில், டெல்லியில் பேசிய காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கே.சி.வேணுகோபால், அசோக் கெஹ்லாட், சச்சின் பைலட் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராகுல் காந்திக்கு அளித்தனர். அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அசோக் கெஹ்லாட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சச்சின் பைலட் துணை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’ என்றார். 
 
அப்போது பேசிய அசோக் கெஹ்லாட், ‘ராஜஸ்தானில் சிறந்த ஆட்சியைத் தருவோம்’ என்று தெரிவித்தார். அதன்பின்னர் பேசிய சச்சின் பைலட், ‘ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியளித்த ராகுல் காந்திக்கு நன்றி’ என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...