![]() |
ராஜபக்சே மீதான சொத்துகுவிப்பு விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: செசெல்ஸ் அரசு அறிவிப்புPosted : சனிக்கிழமை, ஜனவரி 24 , 2015 22:37:21 IST
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச செசெல்ஸ் நாட்டில் சொத்துகளை வாங்கியிருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த, ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ராஜபக்சவின் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்த விசாரணைக்கு செசெல்ஸ் அரசு ஒத்துழைப்பு வழங்குமென அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் போல் அடெம் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. செசெல்ஸ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் இரட்டை வரி தவிர்ப்பு உட்பட பல்வேறு உடன்படிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
|
|