இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தியதோடு அவர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மீதும் தீ வைத்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பதவியில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் பதவியை விட்டு விலக வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பு கூடிய அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த பத்திரிகையாளர்களைத் தாக்கினர். அதனைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடக் கூடிய போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களைத் தாக்கி தீ வைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமானது.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் இருதரப்பினர் மீதும் கண்ணீர் புகை கூண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.