![]() |
தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புPosted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 03 , 2019 22:59:53 IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
|
|