???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  00:21:00 IST

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

புதுச்சேரியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதனிடையே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...