???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   04 , 2019  02:58:06 IST

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக  லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக சென்னை வானிலை  ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

 

இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ளது.  இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த மூன்று தினங்களில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு தினங்களுக்கு தென்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்ஷியஸ்  குறைந்த பட்ச வெப்பநிலை  26 டிகிரி செல்ஷியஸாக இருக்கும்.

 

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம்  சூளூரிலும்  , விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

 

காற்றழுத்த பகுதியின் காரணமாக  4 மற்றும்  5 ஆம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கும்   6, 7, 8  ஆம் தேதிகளில் மத்திய  கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும்  மீனவர்கள் மீன் பிடிக்க செல்லகூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...