???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   24 , 2019  22:55:02 IST

தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 4 சென்டிமீட்டரும், திருவள்ளூரில் 2 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. திருத்தணி, தேனியில் தலா 2 சென்டிமீட்டர் மழையும், சென்னை விமானநிலையம், புதுச்சேரி, அரக்கோணம், பொன்னேரி, வந்தவாசி, செஞ்சி, ஓசூர், மரக்காணம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...