???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

Posted : வெள்ளிக்கிழமை,   மே   17 , 2019  00:01:27 IST

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக வெப்ப காற்றும் வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது, மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனும், மாலையில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் சாரல் அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரியாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...