![]() |
ரயில்வே நிலையங்களில் கவுண்டர்களைத் திறக்க அனுமதிPosted : வெள்ளிக்கிழமை, மே 22 , 2020 08:38:29 IST
கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில்கள், பேருந்துகள், விமானச் சேவைகளுக்கு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. ஜூன் 1-ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதற்கு ஆன்லைனில் மட்டும் டிக்கெட் முன் பதிவு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் கவுன்டர்களிலும் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், டிக்கெட் எடுக்கும்போது உரிய சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
|
|