???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர்: இன்று முதல் விநியோகம்!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   11 , 2019  22:39:42 IST

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் உபரி நீரை ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவித்தார்.

சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக, மேட்டுசக்கரகுப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திட்டப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், ரயில் வேகன்களில் நீரை நிரப்பப்பட்ட நிலையில் இன்று காலை 7 மணிக்கு ரயில், ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது. அதிகாரிகள் கொடியசைத்து ரயிலை தொடங்கி வைத்தனர்.

4 மணி நேரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட ரயில், வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றடையும் எனவும், பின்னர் அங்கிருந்து குழாய்கள் மூலம் கீழ்பாக்கம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு வேகனில் 54,000 லிட்டர் தண்ணீர் என்ற அடிப்படையில், ஒரு முறை 27 லட்சம் லிட்டர் நீரை கொண்டுவர முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, தண்ணீர் வேகன்கள் அடங்கிய மற்றொரு ரயில் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. இந்த இரு ரயில்களும் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...